எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மூடநம்பிக்கையா? முழுநம்பிக்கையா? நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்காக வீட்டிலிருந்து...

மூடநம்பிக்கையா? முழுநம்பிக்கையா?

நீங்கள் ஒரு முக்கியமான வேலைக்காக வீட்டிலிருந்து அவசர அவசரமாக புறப்படுகிறீர்கள்.

வாசற்படியிலோ அல்லது கீழே கிடக்கும் ஏதாவது பொருளிலோ இடித்துக்கொள்கிறீர்கள்.

இந்த நேரம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள், "புறப்படும்போதே சகுனம் சரியில்ல. கொஞ்ச நேரம் உட்கார்ந்து தண்ணீர் குடித்து விட்டுப் போ" என்பார்கள்.

"போயா இன்னும் அந்த காலத்திலியே இருக்க" என்று ஏளனம் செய்ய வேண்டாம்.

இதல் மூடநம்பிக்கை என எதுவுமே இல்லை.

நீங்கள் அவசரமாக புறப்படும் போதே நீங்கள் நிதானத்தில் இல்லை என தெளிவாகிறது.
நிதானத்தோடு புறப்பட்டு இருந்தால் இடித்து கொள்ள மாட்டீர்கள்தானே?

அப்படி நிதானம் இல்லாமல் செய்யப்போகும் காரியமும் வெற்றி பெறாது.அந்த நேரத்தில் நமது மூளையும் சரியாக சிந்திக்காது.

அதனால்தான் சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தண்ணீர் குடித்தால் மூளை அமைதி பெறும். பிறகு நம் சிந்தனையும் சரியான விதத்தில் செயல்படும்.

எதிலும் நிதானத்தை கடைபிடியுங்கள்..

பதிவு : தன்சிகா
நாள் : 16-Nov-14, 10:02 pm

மேலே