உப்புக்காற்றில் கரையாதே........ உறைபனியில் உறையாதே....... சிறு துளி என்னில்...
உப்புக்காற்றில்
கரையாதே........
உறைபனியில்
உறையாதே.......
சிறு துளி என்னில்
நங்கூரம் பாய்ச்சி நில்
நகராதே........!!
காதலின் ஏக்கத்தில்
கலங்காதே
பிரிதலின் நிமித்தத்தில்
வருந்தாதே
என் நினைவுகளின்
அணைப்பினில் அடைபடு
அழுதுவிடாதே......!!
புழுதிக் காற்றில்
நான்......
புனல் அலையில்
நீ.....
அடைமழையில்
நான்........
அழகியபனியில்
நீ.......
மண்ணோடு
நான்.....
நீரோடு
நீ.....
நம் காதலோடு நாம்.........!!
-TO MY JACK SPARROW..........!!