Bangalore Days....!! எப்பொழுதுமே நான் மலையாளப் படங்களை கொஞ்சம்...
Bangalore Days....!!
எப்பொழுதுமே நான் மலையாளப் படங்களை கொஞ்சம் கவனித்துப் பார்ப்பதுண்டு.. இப்பொழுது பெங்களூரு டேஸ்....
சல்மான் நிவின் நஸ்ரியா மூவரும் நண்பர்கள்.. உறவினர்கள்.. மேற்படிப்பு தொடர இருந்த நஸ்ரியாவிர்க்கு ஒரு ஜாதக தோஷத்தினால் திருமணம் நிச்சயிக்கப் படுகிறது.. கணவனாக பகத் பாசில்.... எப்பொழுதும் ஒரு மென்சோகத்துடன் பட்டும் படாததுமான வாழ்க்கை... நஸ்ரியாவும் தன் நண்பர்களிடம் சேர்ந்து வெறுமையை போக்கிக் கொள்ள அங்கும் இங்கும் ஓடாடி நாட்களை நகர்த்துகிறார்.
நிவின் பாலி... ஒரு மென்பொருள் பொறியாளனாக ஒரு கிராமத்து சூழலில் வாழும் ஒரு இளைஞன் தன் கனவுகளுக்கான பெண் தேடி வேலையிலும்.. நட்பின் கூட்டுக்களுமாக நாட்களை நகர்த்துகிறார்...
சல்மான்.... ! மோட்டார் சைக்கிள் பந்தயக் கனவோடு.. சுற்றிவரும் மற்றொரு கதாபாத்திரம் ...
பகத் பாசிலுக்கு நம்ம சில்லுனு ஒரு காதல் போல ஒரு பழைய காதல் இருக்க... அதில் உள்ள மன இறுக்கங்களை நஸ்ரியா தீர்த்து வைக்கிறார்... சல்மான் ஒரு பண்பலை அறிவிப்பாளினியின் குரலால் ஈர்க்கப்பட்டு அவரைக் காண செல்லும்போது அவர் ஊனமுற்றவர் எனத் தெரிந்து. பின் தெளிந்து காதலிக்கிறார். அறிவிப்பாளினி கதா பாத்திரம் வேறு யாருமல்ல.. பூ பார்வதி.. அவருடைய நடிப்பு வழக்கம்போல அருமை.... சிறப்பாக செய்திருக்கிறார்...
நிவின்.. ஒன்றும் சொல்வதற்கில்லை.. அப்பாவி கதாபாத்திரங்களுக்கு அவரைக் கூப்பிடுங்கப்பா.... அருமையான மிகைப்படுத்தா இயல்பான நடிப்பு.
படம் முழுவதும் ஒரு மென்மையான உணர்வுகள் பொதிந்த அழகியல் நம்மை இழுத்துக்கொண்டே போகிறது. சில இடங்களில் நம் ராஜா ராணி பார்ப்பதைப் போல ஒரு தோற்றம் வந்தாலும் இந்தப்படம் பயணிப்பது வேறு தளத்தில்.... நம்மை இழுத்துப் பிடித்து அமர்த்தி " நீங்க பாத்துட்டுதா போகணும் " அப்படின்னு சொல்லவைக்கிற படம்.. பார்த்து முடிச்சப்பறம் ஏன் நான் இந்தப் படத்தை இன்னொரு தடவை பார்க்கக் கூடாதுன்னு கேக்க வைக்கிற படம்... ம்ம்ம்.. நம்மள் ஈயாளுகளை கண்டு கொறைய படிக்கணம்.... !!