எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதுவரை நீ இதுவரை நீ எங்கிருந்தாய் பெண்ணே! முதன்முதலாய்...

இதுவரை நீ இதுவரை நீ
எங்கிருந்தாய் பெண்ணே!
முதன்முதலாய் என் விழிகளுக்குள்
இறங்கிவிட்டாய் கண்ணே!
இதுவரை என் நிலவினிலே யார்
முகமும் தோன்றவில்லை!
இன்றோடு உந்தன் முகம் நிலவாய்
மாறியதே புரியவில்லை!!
என்னென்னமோ தோன்றுதே!
எங்கையும் அவள் முகம் காணுதே!
அவள் காதோரம் ஆடும்
கம்மல் தான்,
என் உடம்புக்குள் இதயமாய்
துடிக்குதே!!
இவள் நடக்கவே, பூக்களால்
பாதை அமைக்கத் தோன்றும்!
இவள் உறங்கவே, தங்கத்தால்
மெத்தை செய்ய வேண்டும்!
விழிகள் இரண்டும் மோதும் போது
சிதறியது என் நெஞ்சம்!
சிதறியதை சேகரித்து காதல் வலை
செய்யதால் கொஞ்சம்!
மெதுமெதுவாய் என்னை அதில்
விழச்செய்தால்,
இதயத்தை அழகாய் திருடிக்கொண்டு காதல்
என்றால்!
உந்தன் நிழல் படும் இடம்,
எந்தன் மனம் விழும்!
நீ தொடரும் வழியெல்லாம்
பின் தொடரும்!!
உந்தன் விழி விழும் இடம்,
எந்தன் விழி இருக்கும்,
விழியோடு விழி சேர்க்கவே
இன்று மனம் துடிக்கும்!!
அடி பெண்ணே ,
பூமியும்,காற்றும் காதல் கொள்ள
காரணம் இல்லையடி,
பூமியெங்கும் தேடினாலும்,என்
காதல் காரணம் உன்னை தவிற
வேறாருமில்லையடி!!
இயற்கையின் அழகு நீயென்பேனே!
நீ வந்தால் தான் இயற்கைக்கும்
அழகென்பேனே!!
பூக்களின் அழகு உன் இதழ் என்பேனே!
உனைப் பார்த்தால் தான் அந்த நிலவும்
அழகென்பேனே!

பதிவு : Ijaz R Ijas
நாள் : 23-Nov-14, 10:21 am

மேலே