28- நவம்பர் 1820,, பொதுவுடைமை போராளி தோழர் ஏங்கெல்ஸ்...
28- நவம்பர் 1820,, பொதுவுடைமை போராளி தோழர் ஏங்கெல்ஸ் பிறந்த தினம்:
அரசு என்பது என்ன? இக்கேள்விக்கு ஏங்கெல்ஸ் கூறுகிறார்:
"அரசு என்பது சமுதாயத்திற்கு வெளியில் இருந்து புகுத்தப்பட்டதல்ல. கடவுளும் ஏற்படுத்தியதல்ல. மனித சமுதாய வளர்ச்சிக் கட்டத்தில் தோன்றிய ஒரு விளைவுதான் அரசு.
சமுதாயத்தில் தீர்க்க முடியாத முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை புலனாக்கும் ஒரு தோற்றமாகும் இது. இந்த முரண்பாடுகள் பொருளாதாரத் துறையில் எதிரும் புதிருமாக எதிர்த்து நிற்கும் வர்க்கங்கள் ஒன்றோடொன்று முட்டி, மோதி அழிந்து போகாமலும் சமுதாயத்தை பயனற்ற போராட்டத்தில் ஆழ்த்தாமலிருக்கும் பொருட்டு வெளித்தோற்றத்தில் இவ்விரு வர்க்கங்களுக்கு அப்பால் அதீதமாக நிற்கும் ஒரு பொருளாகக் காட்சி அளித்துக் கொண்டு முட்டல் - மோதல்களைக் கட்டுக்குள் வைக்க ஒரு சக்தி தேவைப்பட்டது. இந்த சக்தி சமுதாயத்தில் இருந்தே தோன்றியது. நாளாக நாளாக இந்த சக்தி ஓர் அதீத சக்தியாக வளரத் தொடங்கிற்று. இதுதான் அரசு என்பதாகும்."