எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சம்சாரம் அது மின்சாரம்... செய்தி தாளை எடுத்து படித்தால்......

சம்சாரம் அது மின்சாரம்...



செய்தி தாளை எடுத்து படித்தால்... முதல் பக்கத்தில்...
"என் கணவர் ஒரு வார்த்தை சொல்லி அழைத்தால் நான் மறுகணமே அவரிடம் சென்று அவருக்கு பணிவிடை செய்வேன்".

அடேங்கப்பா.. யாரப்பா இது.. ? "நோ தங்கமணி என்சாய்" பாணிய ரொம்ப கடமை உணர்வோடு கடைபிடிகின்றார்களே என்று பார்த்தல், இது நம் நாமத்தின் பிரதமர் மோடி அவர்களின் மனைவியிடம் இருந்து வந்த வார்த்தை என்று தெரிய வந்தது.



மோடி அவர்களின் திருமணம் அது அவரின் தனிப்பட்ட விஷயம் என்பதை நான் அறிவேன். அதை பற்றி யாரும் எனக்கு விளக்க வேண்டாம். நான் இங்கே சொல்லவருவது எல்லாம், இவர் எப்படி இந்த காரியத்தை சாதிக்கின்றார் என்பது தான்.

தாயோடு பிறந்த நாள் கொண்டாட்டம்

சென்ற வருடம் மோடி அவர்களின் பிறந்த நாள் அன்று அவர் நேராக தன் தாயிடம் சென்று இனிப்பு பெற்று ஆசி பெற்று வந்தார். திருமணமான அனைத்து ஆண்களும் இந்த நிகழ்ச்சியை கண்டு பேயிடம் அறை வாங்கியதை (அந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கின்றேன்) போல் கண் பிதுங்கி நிற்கின்றனர்.

இது ஒரு விஷயமா, இதற்க்கு போய் அலட்டி கொள்ளலாமா என்று நினைக்கும் ஆடவர் தமது அடுத்த பிறந்த நாள் அன்று, மனைவியை தவிர்த்து விட்டு நேராக தம் அம்மாவிடம் சென்று ஆசி பெற்று பாருங்கள், அப்போது தெரியும்.

நான் சொல்லும் கூற்றை தவறாக்கவேண்டும் என்று யாரவது இந்த காரியத்தை செய்தால் அது தான் அவர் கொண்டாடிய கடைசி பிறந்த நாளாக இருக்கும் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்.

சரி ஏன் நம் பிரதமர் தன மனைவியை ஒதுக்கி வைத்துள்ளார்? தமக்கு பிடிக்காத சிறு வயது திருமணம் என்றாலும், அந்த அம்மையார் என்ன பாவம் செய்தார்கள்? வாழ்நாள் முழுவதும் இவரை நினைத்தே வாழ்ந்து விட்டு இந்த வயதிலும் " இவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும், நான் அவரிடம் செல்வேன்" என்று கூறுகின்றார்களே, இவர்களை நம் பிரதமர் ஏன் அனுசரித்து போக கூடாது என்று நினைக்கையில் ... பல யோசனைகள் வருகின்றது.

ஒரு வேளை பிரதமர் மோடி அவர்கள், ஆண்வர்க்கம் உயர்ந்த படைப்பு என்று கருதுகின்றாரா? அப்படியும் இருக்காது. ஏன் என்றால் இவரின் அரசியல் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் சில பெண் பேச்சாளர்கள் தான்.. நிர்மலா சீதாராம், மீனாக்ஷி லேக்கி, ஷைனா, ஏன் "ஏல் பல்கலை கழகத்தில் ஒரு வாரத்தில் டிகிரி வாங்கிய" ஸ்மிரிடி இராணி போன்ற பெண் பேச்சாளர்களின் திறமையும் இவரின் வெற்றிக்கு காரணம் என்பது நாடறிந்த உண்மை.
ஒரு பெண்ணுக்கு உயர்ந்த இடத்தையும் தகுதியையும் தரவேண்டும் என்று இவர் நினைப்பது " ஆசிரியர் தினம்" அன்று இவருக்கும் இராணி அம்மையாருக்கும் போட்டு இருந்த இரண்டே இருக்கையில் பார்த்தோமே.

"ஆசிரியர் தினம்"

"சிகரத்தை எட்டிய ஒவ்வொரு மனிதனின் பின்னும் ஒரு பெண் இருக்கின்றாள்" என்னும் கருத்தை சுக்கு நூறாக்கி விடுவார் போல் இருக்கின்றதே.


நான் வாழும் இந்நாட்டில் ஒரு தலைவன் ஒரு பொறுப்பான குடும்ப தலைவனாக இருக்க வேண்டும் என்று ஒரு பொது கருத்து.

குடி உயர்ந்தால் கோன் உயர்வான் (ஹிந்தி கோனும் தான்)
கோனே குடியை உதறும் போது, வரப்பின் உயரம் மிகவும் துயரம்.

எனக்கு ஒரு ஆசை, நம் பிரதமர் தம் மனம் மாறி அந்த அம்மையாரை அழைத்து வாழ்க்கை நடத்த வேண்டும். திருமணம் ஆகி மனைவியிடம் தினந்தோறும் வாழ்க்கை நடத்தினால் தான் அவருக்கும் நாம் படும் பாடும் தெரியும். குடி மக்கள் நாம் படும் கஷ்டத்தை (திட்டு - மிரட்டல்- கோவித்து கொள்தல் -சில நேரங்களில் பூரி கட்டை, மற்றும் பல) நமது பிரதமரும் அனுபவிக்க வேண்டும்.

மோடி அவர்களின் வெற்றியை பார்த்து விட்டு என் நண்பன் தண்டபாணி தன் மனைவியிடம் " மோடி அவர்களின் வழியில் நானும் உன்னை தள்ளி வைத்து விட்டு பொது வாழ்க்கைக்கு செல்கிறேன் என்றான், அடுத்த நாள் பொது மருத்துவமனையில் இருந்து ஒரு போன் வந்தது. உங்கள் நண்பன் தண்டபாணி, பல பலத்த உள்காயத்துடன் இங்கே அனுமதிக்க பட்டுள்ளார் என்று".

பின் குறிப்பு ;

ஜோக்ஸ் அப்பார்ட்! பிரதமர் இந்த அம்மையாரை ஏற்று கொண்டு நாட்டிற்க்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கலாமே? இவர் இப்படி செய்தால், பல பிரிந்த குடும்பங்கள் சேர்ந்து வாழ வாய்ப்பு உள்ளதே

பதிவு : விசு
நாள் : 3-Dec-14, 11:25 am

மேலே