விசு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விசு |
இடம் | : USA |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 7 |
எனக்கு தமிழின் மேல் ஒரு தலை காதல். அம்புடுதேன்!rnதமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து உலகை சுற்றி வளம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலை காதல். எழுதி-பேசி-பாடி கொண்டே இருப்பேன். அருமையான ஈழத்து பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டு தயாரிப்பில் இரண்டு ராசாதிக்கள். தொழில் ரீதியாக பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.
அச்சச்சோ புன்னகை ....
என்னா விசு ? கோழிய அடிச்சி கொழம்பு கொதிக்கும் வாசனை வரும் போது தானே எழுவ? இப்ப எல்லாம் கொஞ்ச நாளா கோழி கூவும் போதே எழுறியே என்ன விஷயம்?
அது எல்லாம் ஒன்னும் இல்ல? நான் எப்போதும் போல தான் காலையில் ஐந்து மணிக்கு தான் எழுறேன்.
டேய், எனக்கு ஏற்கனவே காத்து குத்தியாச்சி, இதில் நீ வேற..
உண்மைய சொல்லு..
மச்சி, இந்த மாதிரி பொதுவா "உண்மைய சொல்லுன்னு" யாராவது கேட்கும் போது ரொம்ப ஜாக்கிரதையா பதில் சொல்ல வேண்டும். அவங்க எதோ கேட்க போய் நம்ப நம்மை பற்றிய தேவையில்லாத விஷ (...)
கிறிஸ்மஸ் .. "உன் கண்ணில் நீர் வழிந்தால்..."
பள்ளி காலத்தின் இறுதி ஆண்டு ....என் அருமை தங்கை புற்றுநோயோடு நான்கு வருடங்கள் போராடி பின்னர் போராட சக்தி இல்லாமல் இறைவனடி சேர்ந்த வருடம்...
குடியரசு தினமான ஜன 26ம் தேதி பிறந்து சுதந்திர நாளானா ஆகஸ்ட் 15ம் தேதி தன் 14ம் வயதில் உயிர் நீத்த நாள். அவள் பிரிந்து 4 மாதம் தானே ஆகின்றது. கிறிஸ்மஸ் எப்படி கொண்டாட முடியும்? வீட்டில் அலங்காரமும் இல்லை, தின்பண்டங்களும் இல்லை, சிரிப்பும் இல்லை மற்றும் வழக்கமாக இருக்கும் உறவினர் வருகையும் இல்லை.
சென் (...)
லிங்காவும் வேண்டாம்.. மலிங்காவும் வேண்டாம்..
ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டு வீட்டிற்க்கு வரும் வழியில்...அலை பேசி அலறியது..
விசு...
சொல்லு பாணி..
என்ன பண்ற?
ஒன்னும் இல்ல பாணி...மாடு கட்டி போரடித்தா பத்தாதுன்னு யானை வாங்கலாமான்னு யோசித்து கொண்டு இருக்கேன். நீ என்னா நினைக்கிற? மாடே போதுமா ? இல்ல யானை வாங்கலாமா? இல்லை உங்க ஊர் ஸ்டைலில் ரோட்டில் போட்டு விட்டு போற வர வண்டியை வச்சி இலவசமா போரடிக்கலாமா?
வாத்தியாரே.. மதுரை குசும்பு எனக்கே வா? சரி, ஒரு எட்டு மணி போல் வீட் (...)
ரஜினிகாந்த் படம் ரிலிஸ்! முதல் நாள்.. முதல் காட்சி...
விசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு கல்லூரிக்கு வந்து விடு, கும்பலா போய் தாக்கிடலாம்.
டேய்.. சத்தமா பேசாதா, வீட்டில் அம்மா இருக்காங்க, நீ சொன்னது மட்டும் காதில் விழுந்தது.. மவனே.. உங்க அம்மா எங்க அம்மா, மற்றும் ஊரில் இருக்கிற எல்லா அம்மாக்களும் நாளைக்கு கல்லூரிக்கு வந்து அவங்க அவங்க பிள்ளைகள் ஒழுங்கா படிக்குதா இல்ல சினிமாவிற்கு போகுதா (...)
கைக்கு எட்டியது வாய்க்கு.......
லேசாக மழைத்தூறல் பார்த்தவுடனே எல்லா தமிழனுக்கும் வரும் ஆசை தான் எனக்கும் வந்தது.
அடே டே.. இந்த நேரத்தில் மட்டும் ஒரு மிளகாய் பஜ்ஜி கிடைத்தால் ...? எவ்வளவு நன்றாக இருக்கும்..
மனைவியிடம் கேட்டு வாங்க முடியாது? ஒரு பஜ்ஜிக்காக நமக்கு அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு பஜ்ஜியால் உடம்பிற்கு வரும் கேடை பற்றி விளக்கி நம்மை வாழ்க்கை முழுவதும் பஜ்ஜி சாப்பிட முடியாதவாறு செய்து விடுவார்கள்.
என்ன செய்வது என்று நினைத்து கொண்டு இருக்கையிலே...
என்னங்க..
சொல்ல (...)
கேக் வேணுமா? கேக்கவே வேண்டாம்!
அமெரிக்க நாட்டில் எனக்கு பிடித்த விஷயங்கள் பல இருப்பினும் இங்கே
பிடிக்காத விஷயங்களும் சில உள்ளன. அதில் ஒன்று தான், இந்த பிறந்த நாள் கொண்டாட்டம்.
பிறந்த நாள் கொண்டாடுவதை எதிர்ப்பவன் அல்ல நான், அதலால் என்னை தவறாக நினைக்க வேண்டாம். இங்கே இந்த பிறந்தநாளை கொண்டாடும் போது வாங்கி வருகின்றார்களே ஒரு கேக், அதன் மேல் தான் எனக்கு வெறுப்பு.
ஒவ்வொரு முறையும் யாருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்றால் அங்கே இருக்கும் கேக்கை பார்த்தால் சில எண்ணங்கள்.
இங்கே (...)
போனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...
பள்ளி இறுதி நாட்களில் வெளி வந்த படம் " நினைத்தாலே இனிக்கும்" . ரஜினி காந்த் (அப்போ சூப்பர் ஸ்டார் என்ற அடை மொழி எல்லாம் இல்லை) மற்றும் கமல் ஹாசன் (அன்றும் சரி இன்றும் சரி இவரை உலக நாயகன் என்று என்னால் அழைக்க முடியவில்லை, வட இந்தியாவிலே இவர் படத்தை பார்க்க ஆள் இல்லை, பிறகு எப்படி உலகநாயகன்?) இருவரும் சேர்ந்து நடித்த படம்.
MSV அவர்களின் 1000மாவது படம் என்று எங்கேயோ படித்த நினைவு, ஆனால் ஊர்ஜிதமாக சொல்ல முடியாது. அருமையான பாட்டுகள், அட்டகாசமான ப (...)
இவர் தாய் மாமா இல்ல... "தலாய் லாமா..".
நன்றி திருநாள்!
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் கடைசி வியாழன் அன்று இங்கே " நன்றி திருநாள்" கொண்டாடப்படும். இந்நாளில் ஒவ்வொரு குடும்பமும் அனைவருமாக சேர்ந்து ஒரு இல்லத்தில் அமர்ந்து கடந்த வருடத்திலேயும் சரி, தங்கள் வாழ்க்கையிலேயும் சரி, தமக்கு உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டி உண்டு மகிழ்வர்.
இந்த வருடம் நான் பாராட்டும் நன்றி...இவர்களுக்கு!
உண்ண உணவு,இருக்க இருப்பி (...)
டேய் சேகரு...
சொல்லு முத்து
உன்னை பார்த்தா பரிதாபமாக இருக்குடா?
என்ன சொல்ல வர?
உனக்கு 8 வயசு இருக்கும் போது உங்க அம்மா இறந்துட்டாங்க. அவங்கதான் உன்னை என்னா நல்லா வைச்சிருந்தாங்க.. அவங்க போன பின்ன இந்த 4 வருஷத்தில் உனக்கு என்ன கஷ்டம். உன்ன பார்க்கையில் மனசுக்கு ரொம்ப விசனம்.. எப்படி இருந்த நீ...
ஆமா முத்து, நானும் எங்க அம்மாவை நினச்சி அழாத நாள் இல்ல. என்ன செய்றது. நான் கொடுத்து வைச்சது அவ்வளவு தான். அம்மா போனாலும், ஆண்டவன் புண்ணியத்தில் எங்க அப்பா ஒரு நல்ல மனுஷன், அவர் என்ன நல்லாதானே கவனிக்கிறார்.
என்ன சேகர் முட்டாள்தனமா பேசுற.. உங்கம்மா செத்து ரெண்டே வருஷதுள இன்னோர் பொம
ஏங்க... உடனே கூப்பிடுன்னு மெசேஜ் விட்டு இருக்கீங்க...ஆபிசில் கொஞ்சம் பிசி, அதனால உடனே கூப்பிட முடியல? என்ன அவசரம். இஸ் எவ்ரிதிங் ஆல் ரைட் ?
ஒன்னும் இல்ல மா, இன்னைக்கு காலையில் நீ ஆபிசிக்கு போகும் போது தெரியாமல் என் கார் சாவியையும் எடுத்து கொண்டு போய் விட்டாய். மூத்தவளுக்கு வேற ஒரு முக்கியமான பரீட்சை, கொஞ்சம் கூட தாமதமாக போக கூடாதுன்னு சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள்..
அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?
பக்கத்துக்கு வீட்டு ஆளிடம் மெதுவாக பேசி காரை கடன் வாங்கி பிள்ளையை பள்ளியில் விட்டு (...)