பனிமழைக்காலம் கம்பளி போர்வைக்குள் வெடவெடக்கும் உடல்கள்.. கையுறைக்குள் கனத்து...
பனிமழைக்காலம்
கம்பளி போர்வைக்குள் வெடவெடக்கும் உடல்கள்..
கையுறைக்குள் கனத்து போகும்
கரங்கள்..
கன்றிச் சிவந்து போகும்
காதுமடல்கள்..
மொத்தத்தில் பிணவறை பிணங்களாய் நாம் -இருந்தும்
எத்தனை விதமாய் புகைப்படங்கள்
இத்தனை தீரம் வேண்டுமாடா தமிழா நமக்கு...