பாலா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாலா |
இடம் | : திருகோணாமலை |
பிறந்த தேதி | : 18-Jan-1978 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 08-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 187 |
புள்ளி | : 1 |
உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...
உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...
பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும்
உன்னைப் போலவே இருக்கின்றன...
மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...
உன் இதழ் தொட்டதும்
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது
உதட்டுச் சாயத்திற்கு...
இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...
நீ
வெளியில் வராதே
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...
உன் பாத சுவடுகளை
அழிக்க மனமில்லாமல்
அலைபாய்கிறது அலைகள் கூட...
நீ
கண்காட்சிக்கு செல்லும்ப
திருப்ப முடியாத
அடமானம்...,
உன்னிடம் பறிகொடுத்த
என் மனது ...!
திருப்ப முடியாத
அடமானம்...,
உன்னிடம் பறிகொடுத்த
என் மனது ...!
பயங்கரங்களை எதிர்த்ததால்
பயங்கரவாதி ஆனோம் ஆம் நாம்
பயங்கரவாதி தான் .
தார் கொதிப்பில் போடப்பட்ட
குழந்தைகளையும்
தாவணி உருகப் பட்ட பெண்களையும்
ஆணுறுப்பு அறுக்கப் பட்ட ஆண்களையும்
கண்டபின் ஆத்திரம் கொண்டோமே
ஆம் நாங்கள் பயங்கரவாதி தான் .
அமைதி காக்கவென அரிதாரம் பூசி
வந்த
சீக்கிய படைகளின் அம்மண வேட்டைக்கு
முற்றுபுள்ளி வைக்க ஆயுதம் எடுத்தோமே
ஆம் நாம் பயங்கரவாதி தான் .
அர்த்தம் அற்ற இந்திய அரசியலால்
அப்பன் அற்ற பிள்ளைகள் இங்கு உருவாக
அனுப்பி வைத்த தலைவனை அடியோடு அழித்தோமே ஆம் நாம் பயங்கர வாதி தான்
பேரினவாதங்கள் பேயாகி துரத்துகையில்
எம்மினம் காக்கவென இரையாகி
காதல் கடவுளின் ஆதி ஏற்பாடு
ஆதாம் ஏவாளின் ஜோதி புறப்பாடு
கனிந்த காதலில் அன்று தின்ற
தீங்கனி தீது! அது காதல் மீது!
காமம் தரித்த காதல் தறிப்போம்
காதல் நிறைத்த காதல் நிறைப்போம்
காதல் பெயரில் காமசேட்டைகளில்லா
காதல் ஒழுக்கம் கற்றுக் கொடுப்போம்
செல்லிடை பேசியில் உறவாடும் போதும்
சொல்லிடையே கற்பு மதிப்போம்
திருமண பந்தம் முடியும் மட்டும்
இருமனத்திற்கும் எல்லை வகுப்போம்
பெற்றவர் சம்மதம் பெறும் வரை
உத்திரவாதங்கள் தள்ளி வைப்போம்
பெற்றவர் சம்மதம் கிடைத்து விட்டால்
ஊரை அழைத்து விருந்து வைப்போம்
பிள்ளைகள் நமக்கு பிறந்த போதும்
நமக்கு பிள்ளைகளாய் நாமிருப்போம்
முதுமை நமக்கு வந்தபோதும்
காதல் கடவுளின் ஆதி ஏற்பாடு
ஆதாம் ஏவாளின் ஜோதி புறப்பாடு
கனிந்த காதலில் அன்று தின்ற
தீங்கனி தீது! அது காதல் மீது!
காமம் தரித்த காதல் தறிப்போம்
காதல் நிறைத்த காதல் நிறைப்போம்
காதல் பெயரில் காமசேட்டைகளில்லா
காதல் ஒழுக்கம் கற்றுக் கொடுப்போம்
செல்லிடை பேசியில் உறவாடும் போதும்
சொல்லிடையே கற்பு மதிப்போம்
திருமண பந்தம் முடியும் மட்டும்
இருமனத்திற்கும் எல்லை வகுப்போம்
பெற்றவர் சம்மதம் பெறும் வரை
உத்திரவாதங்கள் தள்ளி வைப்போம்
பெற்றவர் சம்மதம் கிடைத்து விட்டால்
ஊரை அழைத்து விருந்து வைப்போம்
பிள்ளைகள் நமக்கு பிறந்த போதும்
நமக்கு பிள்ளைகளாய் நாமிருப்போம்
முதுமை நமக்கு வந்தபோதும்
உன் விரல்
பிடித்து நடக்க
வேண்டிய பாதைகள்
எவரால் அடைபட்டுப்
போனது...
உன் தாலாட்டோடு
நானும் முனங்கிட
வேண்டிய
பிழையான வரிகள்
எப்படி அழிந்து
போனது...
உன் தோளேறி
சுற்றிப்பார்க்க வேண்டிய
திருவிழாக்கள்
எப்போது முடிந்து
போனது...
உன் கால்பிடித்து
தூக்கச்சொல்ல வேண்டிய
என் பிடிவாதங்கள்
எங்கே விட்டுப்
போனது...
யார் செல்லம் நீயென
கேட்டு பெருமைப்பட
வேண்டிய நேரங்கள்
எங்கே தொலைந்து
போனது...
நடுநிசியில் நான் விழித்தால்
கால் வலிக்க எனை சுமந்து
நீ நடக்க சொகுசாய்
உன் கைகளில் நானுறங்கிட
வேண்டிய இரவுகள்
எவ்வாறு விடிந்து
போனது...
ஊசி போடுகை
என் ஆசை
நொடிக்கு ஒரு முறை
நலம் கேட்க ஆசை..
நிமிடத்திற்கு ஒரு முறை
முத்தமிட ஆசை..
மணிக்கு ஒரு முறை
காதல் சொல்ல ஆசை..
நாளுக்கு ஒரு முறை
நானே ஊட்டிவிட ஆசை..
வாரத்தில் ஒரு முறை
கரம்கோர்த்து நிலா ரசிக்க ஆசை..
மாதத்தில் ஒரு முறை
விடுமுறை(உனக்காக) எடுக்க ஆசை..
ஆண்டிற்கு ஒரு முறை
மீண்டும் உன்னை மணம்முடிக்க ஆசை..
எனக்காக ஒரு உறவு
இதற்கெல்லாம் வேண்டும் என்று ஆசை..
தினமும் பார்க்கிறேன் அவரை
உணவாக ஏதோ ஒன்றை மென்றபடி..
கடதாசி பெட்டிகளை போர்வையாய் சுற்றியபடி.
என்றாவது ஒருநாள் பளிச்சென்றபடி..
உழைக்கவில்லை..
உறவுகளில்லை..
உறைவிடமோ அந்த மரத்தடி-இருந்தும்
கையேந்தி கண்டதில்லை யாரும்
பனிமழை பூவாய் பெய்து
பாதைகளில் அரையடி படர்ந்து உறைந்தது பனிக்கட்டி..
வீதிகள் யாவும் வெறிச்சோடிக் கிடந்தது
என் மனக்கண்களில் அவர்
எப்படி போவது -ஆனாலும் போ என்றது
எத்தனை முறை பனிசறுக்கி விழுந்தேனோ நினைவிலில்லை..அந்த
மரத்தடியருகில் நான்
கைகள் மட்டுமே வெளியில் தெரிந்தது
அலற (...)
எதற்காக தேடுகிறாய் என்னை...
அன்பை காட்டியபோது-அதை
குப்பையில் போடென்றாய்
ஆசையாக சமைத்தபோது-இது
சாப்பாடா என்றாய்...
அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றபோதும்
மலடி என்றாய்...
ஊனம் உடலில்தான் உள்ளத்தில் இல்லை
என்றார்கள்-அதை நம்பி
வாழ்வு கொடுத்தது என் தப்பா?
எனக்குள் இருந்த இலட்சியங்கள் கூட-நடை
பிணமாய் போனதே!
உன்னிடம்
பொன் கேட்கவில்லை..
பொருள் கேட்கவில்லை-அதனால்
என்னை பெண்ணே இல்லையென்றாய்..
நீ தந்த காயங்களும் வலிகளும்
ஆறவில்லை இன்னும் என்னுள்ளே..
எதற்காக தேடுகிறாய் என்னை
குற்றுயிராய் வாழ (...)