எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தினமும் பார்க்கிறேன் அவரை உணவாக ஏதோ ஒன்றை மென்றபடி.....

தினமும் பார்க்கிறேன் அவரை
உணவாக ஏதோ ஒன்றை மென்றபடி..
கடதாசி பெட்டிகளை போர்வையாய் சுற்றியபடி.
என்றாவது ஒருநாள் பளிச்சென்றபடி..
உழைக்கவில்லை..
உறவுகளில்லை..
உறைவிடமோ அந்த மரத்தடி-இருந்தும்
கையேந்தி கண்டதில்லை யாரும்
பனிமழை பூவாய் பெய்து
பாதைகளில் அரையடி படர்ந்து உறைந்தது பனிக்கட்டி..
வீதிகள் யாவும் வெறிச்சோடிக் கிடந்தது
என் மனக்கண்களில் அவர்
எப்படி போவது -ஆனாலும் போ என்றது
எத்தனை முறை பனிசறுக்கி விழுந்தேனோ நினைவிலில்லை..அந்த
மரத்தடியருகில் நான்
கைகள் மட்டுமே வெளியில் தெரிந்தது
அலறினேன் வாய்திறந்து
வார்த்தைகள் வந்ததா தெரியவில்லை
வயதானோர் சிலர் வந்தார்கள்..
வளவள என்று பேசிக்கொண்டார்கள்
மொழி பிரன்ஞ் புரியவில்லை..
மாதம் ஒன்று கடந்து போனது
மரத்தடியை நானும் கடந்து போனேன்
மரத்தின்மேல் ஒரு கொடி
மனிதரின் மரணத்தை சொல்லியபடி..
ஆத்மா சாந்தியடையட்டும் மனதுக்குள் சொல்லியபடி நானும்...






பதிவு : பாலா
நாள் : 20-Dec-14, 4:50 pm

மேலே