இப்படி நாம் காதலிப்போம் - பொங்கல் கவிதை போட்டி 2015
காதல் கடவுளின் ஆதி ஏற்பாடு
ஆதாம் ஏவாளின் ஜோதி புறப்பாடு
கனிந்த காதலில் அன்று தின்ற
தீங்கனி தீது! அது காதல் மீது!
காமம் தரித்த காதல் தறிப்போம்
காதல் நிறைத்த காதல் நிறைப்போம்
காதல் பெயரில் காமசேட்டைகளில்லா
காதல் ஒழுக்கம் கற்றுக் கொடுப்போம்
செல்லிடை பேசியில் உறவாடும் போதும்
சொல்லிடையே கற்பு மதிப்போம்
திருமண பந்தம் முடியும் மட்டும்
இருமனத்திற்கும் எல்லை வகுப்போம்
பெற்றவர் சம்மதம் பெறும் வரை
உத்திரவாதங்கள் தள்ளி வைப்போம்
பெற்றவர் சம்மதம் கிடைத்து விட்டால்
ஊரை அழைத்து விருந்து வைப்போம்
பிள்ளைகள் நமக்கு பிறந்த போதும்
நமக்கு பிள்ளைகளாய் நாமிருப்போம்
முதுமை நமக்கு வந்தபோதும்
இளமைக் காதலில் திளைத்திருப்போம்
இப்படிக் காதல் செய்திடல் வேண்டுமென்று
இளைய தலைமுறைக்கு வாழ்ந்து சொல்வோம்
மரணம் நம்மை பிரிக்கும் வரை
மகிழ்வாய் வாழ்க்கையை வாழ்ந்திருப்போம்