எதற்காக தேடுகிறாய் என்னை... அன்பை காட்டியபோது-அதை குப்பையில் போடென்றாய்...
எதற்காக தேடுகிறாய் என்னை...
அன்பை காட்டியபோது-அதை
குப்பையில் போடென்றாய்
ஆசையாக சமைத்தபோது-இது
சாப்பாடா என்றாய்...
அடுத்தடுத்து குழந்தைகளை பெற்றபோதும்
மலடி என்றாய்...
ஊனம் உடலில்தான் உள்ளத்தில் இல்லை
என்றார்கள்-அதை நம்பி
வாழ்வு கொடுத்தது என் தப்பா?
எனக்குள் இருந்த இலட்சியங்கள் கூட-நடை
பிணமாய் போனதே!
உன்னிடம்
பொன் கேட்கவில்லை..
பொருள் கேட்கவில்லை-அதனால்
என்னை பெண்ணே இல்லையென்றாய்..
நீ தந்த காயங்களும் வலிகளும்
ஆறவில்லை இன்னும் என்னுள்ளே..
எதற்காக தேடுகிறாய் என்னை
குற்றுயிராய் வாழும் என்னை
கொன்றுவிட்டு போகவா.