நடிகர்– நடிகைகள் உடல் உறுப்பு தானம் நடிகர்– நடிகைகள்...
நடிகர்– நடிகைகள் உடல் உறுப்பு தானம்
நடிகர்– நடிகைகள் உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே பல நடிகர்கள் இதற்கான உறுதிமொழி பத்திரங்களில் கையெழுத்திட்டு உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். நடிகர் கமலஹாசன் உடல்தானம் செய்வதாக கூறியுள்ளார். மருத்துவ மாணவர்கள் படிப்புக்கு உடம்பை தானம் செய்வதாக உறுதி அளித்து இருக்கிறார்கள்.
நடிகை சினேகா கண்களை தானம் செய்து பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளார். நடிகர் மாதவன், கண்கள், இருதயம், சிறுநீரகம், கல்லீரல், எலும்பு போன்ற அனைத்தையும் தானம் செய்வதாக கூறியுள்ளார்.
இதுபோல் நடிகர் சூர்யாவும் தனது உடல் உறுப்புகளை தானம் செய்கிறார். சமீபத்தில் உடல்தான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றார். அதன் பிறகு உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவர் அறிவித்தார். தன்னைப்போல் எல்லோரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.