பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு -

பயங்கரங்களை எதிர்த்ததால்
பயங்கரவாதி ஆனோம் ஆம் நாம்
பயங்கரவாதி தான் .

தார் கொதிப்பில் போடப்பட்ட
குழந்தைகளையும்
தாவணி உருகப் பட்ட பெண்களையும்
ஆணுறுப்பு அறுக்கப் பட்ட ஆண்களையும்
கண்டபின் ஆத்திரம் கொண்டோமே
ஆம் நாங்கள் பயங்கரவாதி தான் .

அமைதி காக்கவென அரிதாரம் பூசி
வந்த
சீக்கிய படைகளின் அம்மண வேட்டைக்கு
முற்றுபுள்ளி வைக்க ஆயுதம் எடுத்தோமே
ஆம் நாம் பயங்கரவாதி தான் .

அர்த்தம் அற்ற இந்திய அரசியலால்
அப்பன் அற்ற பிள்ளைகள் இங்கு உருவாக
அனுப்பி வைத்த தலைவனை அடியோடு அழித்தோமே ஆம் நாம் பயங்கர வாதி தான்

பேரினவாதங்கள் பேயாகி துரத்துகையில்
எம்மினம் காக்கவென இரையாகி போகின்றோமே ஆம் நாம் பயங்கரவாதி தான் .

நாங்கள் உருவாகவில்லை
நீங்கள் உருவாக்கினீர்கள் .
இன்றும்
பயந்து போகவில்லை பதுங்கி நிக்கின்றோம்
பாயும் நாளுக்காக ...!!!!

எழுதியவர் : கயல்விழி (28-Mar-15, 9:45 am)
பார்வை : 207

மேலே