என் ஆசை நொடிக்கு ஒரு முறை நலம் கேட்க...
என் ஆசை
நொடிக்கு ஒரு முறை
நலம் கேட்க ஆசை..
நிமிடத்திற்கு ஒரு முறை
முத்தமிட ஆசை..
மணிக்கு ஒரு முறை
காதல் சொல்ல ஆசை..
நாளுக்கு ஒரு முறை
நானே ஊட்டிவிட ஆசை..
வாரத்தில் ஒரு முறை
கரம்கோர்த்து நிலா ரசிக்க ஆசை..
மாதத்தில் ஒரு முறை
விடுமுறை(உனக்காக) எடுக்க ஆசை..
ஆண்டிற்கு ஒரு முறை
மீண்டும் உன்னை மணம்முடிக்க ஆசை..
எனக்காக ஒரு உறவு
இதற்கெல்லாம் வேண்டும் என்று ஆசை..