எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் மட்டுமல்ல நெருங்கிய அத்தனை உறவுகளும் என்னை போல்...

நான் மட்டுமல்ல
நெருங்கிய அத்தனை உறவுகளும்
என்னை போல் தான் ...
தான் நேசிப்பவரை
தான் நேசிப்பது போல்
தன்னை மட்டும் ...
அவர் நேசிக்க வேண்டுமென்கிற
சுயநலம் இருக்கத்தான் செய்கிறது
இயல்பான பட்சத்தில்
செலுத்துவதும் எதிர்பார்ப்பதும்
அன்பென்கிற பொழுது
சுயநலமும்
சுவையாகத்தான் தெரிகிறது ...

பதிவு : சுமித்ரா
நாள் : 7-Dec-14, 9:11 pm

மேலே