வருவதும் போவதும் தெரியாது ... இன்பமும் துன்பமும் வாழ்க்கையில்...
வருவதும் போவதும் தெரியாது ...
இன்பமும் துன்பமும் வாழ்க்கையில் நிரதரம் கிடையாது .....
துன்பத்தை தாங்கும் அளவிற்கு மனதைரியத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்வோம்...
இன்பம் கொடுத்த இறைவனை வாழ்த்தி பாடுவோம்...
என்ன நாம் செய்தோம் இந்த ஆண்டு ..
என்ன நாம் செய்யப்போகிறோம் வருகிற ஆண்டு...
நினைத்து பார் ...
ஒரு நிமிடம் கண்களை மூடி கடவுள் முன் நிற்கும் தராசில் உன் நல்லது கேட்டதை வைத்து பார்...
பெற்றோரை கஷட்டப்படுத்தினாயா? சந்தொஷப்படுத்தினாயா?
மற்றவர்களை மதித்தாயா? இல்லையா?
பொய் சொன்னாயா ? இல்லையா?
உதவிகள் செய்தாயா ? இல்லையா ?
மற்றவர்களுக்கு துன்பம் கொடுத்தாயா ? இல்லையா ?
உதவிகள் செய்தாயா ? இல்லையா ?
உதவிகள் சுயநலத்துக்காக செய்தாயா ? பிறர் நலத்துக்காக செய்தாயா?
செல்வத்தை செமித்தாயா ? வீணாக செலவு செய்தாயா?
கேட்டவர்களுக்கு கொடுத்தாயா ? இல்லையா ?
நாட்டிற்காக ஒரு நல்லதேனும் செய்தாயா ? இல்லையா ?
மனைவியை மதித்தாயா ? இல்லையா ?
பிள்ளைகள் மனம் மகிழ நடந்தாயா ? இல்லையா ?
ஆசிரியர்கள் வருத்தப்பட நடந்தாயா ? இல்லையா ?
உன்னால் சமுதாயம் நல்லதை கண்டதா ? இல்லை கேட்டதை கண்டதா?
மற்றவர்கள் பொருளுக்கு ஆசைப்படாமல் இருந்தாயா இல்லையா ?
மற்றவர்கள் உன்னை மதிக்கும்படி நடந்து கொண்டாயா ? இல்லையா?
உன் நண்பன் நட்புக்கு களங்கம் வராமல் பார்த்து கொண்டாயா ? இல்லையா?
சிலவைகளை தராசில் வைத்து உன் கடவுள் முன் நீ நின்று பார் அப்போது தெரியும் நீ யார் என்பது...
ஆண்டுகள் பல உண்டு ஆனால் ...
ஆண்டவன் உனக்கு கொடுத்த இந்த ஆண்டு ...
நன்றாக செலவிட்டாயா என்று...
தராசு தட்டில் நின்று ....
உன்னை நீ கேட்டுப்பார் நீ நல்லவனா என்று...
நல்லவைகள் அனைத்தையும் எழுதி அதை தீயில் இட்டு பொசுக்கிவிடு...
நல்லவைகள் இறைவன் கொடுத்தது அது என்றும் உன்னை விட்டு போகாது ....
கேட்டவைகளை எழுதி வைத்துக்கொள் ..
அவைகளை மறந்தும் கூட வாழ்வில் செய்துவிடாதே ...
நல்லவைகளை தெரியாமல் கூட உன்கைகள் செய்யட்டும் ..
ஆனால் கேட்டவைகளை உன் உயிர் போகும் நிலையிலும் செய்துவிடாதே...
உடலின் சுத்தம் உன்னை பொறுத்தது ...
மனதின் சுத்தம் நீ ஆண்டவனுக்கு என்ன படைத்து கொடுக்க போகிறாய் என்பது...
போனது போகட்டும் என்று புது ஆண்டை வரவேற்காதே ...
போனதில் கெட்டவைகள் இனி புதுப்பிக்க கூடாது என்பதை மனதில் வைத்து புது ஆண்டில் புத்துணர்வு பெற்று..
வீடும் நாடும் வளம் பெற ...
இறைவனுக்கு நன்றி சொல்லி இன்பமாய் வாழ..வாழ்த்துக்கள்.
தமிழர்களுக்கும்...
தமிழ் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம் ....
2013-12-31
31-12-2013
12-31-2013
நாட்கள் எப்படி மாறினாலும் ஒருநாள் மறைந்துதான் ஆகவேண்டும் என்பதை நினைவில் கொண்டு...
நல்லதை நினைத்து நல்ல உள்ளத்தோடு அடி எடுத்து வைப்போம் அடுத்த ஆண்டு...01-01-2014 புது ஆண்டு வாழ்த்துக்கள் .....