பாரதியார் பிறந்தநாளில் இந்த தளத்திலுள்ள புதுமைப்பெண்களுக்கு என் வாழ்த்துக்களை...
பாரதியார் பிறந்தநாளில் இந்த தளத்திலுள்ள புதுமைப்பெண்களுக்கு என் வாழ்த்துக்களை சொல்வதில் மகிழ்கிறேன் .
தடைகளை உடைத்து
சரித்திரங்களை எழுதும்
பாரதியின் புதுமைப்பெண்களே!
பெண் பாரதிகளே..!
வீரியமிக்க எழுத்தால்
ஆதிக்கத்தை தகர்க்கும்
மாண்புமிகு படைப்பாளிகளே..!
புது சரித்திரம் எழுதுங்கள்..!
இன்னும் இன்னும்
அடிமை கோலத்திலிருக்கும்
அபலை பெண்களை
உங்கள் எழுத்துக்களால்
விடுதலையை பெற்றுக்கொடுத்து
வீறுநடையிட வையுங்கள்..!
உங்களால் மட்டுமே இது சாத்தியம்!
துணைக்கு நாங்கள் நிச்சயம்...!
வாழ்த்துக்கள்..! வாழ்த்துக்கள்..!!
-இரா.சந்தோஷ் குமார்