எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாரதி பாரதி ஒப்பிடவே இயலாதவன்.மென்மையும் ,இனிமையும் ,கோபமும்,தாகமும் பெருக்கெடுத்த...

பாரதி
பாரதி ஒப்பிடவே இயலாதவன்.மென்மையும் ,இனிமையும் ,கோபமும்,தாகமும் பெருக்கெடுத்த பேரறிஞன் . நாடு ,மக்கள் ,இயற்கை ,விலங்கு என அனைத்திலும் அக்கறையும் அன்பும் கொண்ட மகா கவிஞன் இசையிலும். தேரந்தவன்.
அவன் கவிதையில் பொங்கி வரும் காதல் உலக அருவிகளில் மிகப்பெரிய அருவியாகிக் கொட்டுகிறது அன்பை. அனைத்திலும் உயர் நிலை அடைந்த ஞாநியானான். பக்தியில் முழுகினான், கண்ணன் காதலனான். மிக எளிமையாய் இனிமையாய் அனைத்திலும் தான் கண்ட கண்ண்னை நம்மில் பதிய வைத்தான். "காயிலே புளிப்பதென்ன? கண்ண்பெருமானே! கனியிலே இனிப்பதென்ன ? கண்ணபெருமானே!" இனிப்பு புளிப்பு என அனைத்திலும் ஒன்றினான் கண்ணனைக் கசிந்துருகிக் காதலித்து.
கட்டாயத்தின் பேரிலோ, பணத்தின் பொருட்டோ எழுதவில்லை பாரதி.மனதில் உயிரில் கலந்துவிட்ட ஜீவஜோதியாய் சுடர்விட்டது அவன் ஞானம் . அத்தீ அவனை சமயங்களில் நொந்து கோபம் கொள்ள்வும் செய்தது 'சுடர் விடும் அறிவுடன் ஏனடி எனை படைத்தாய் என்று .
விதி செய்ய அழைத்தான் நம்மை .பட்டினியில் வாடியவர் கண்டு இவன் பசி உணர்ந்து,
" இனியொரு ருவிதி செய்வோம் -அதை
எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை யழித்திட "உருமினான்.
எல்லையற்ற அவன் ஞானம் பரந்து விரிந்து பெல்ஜியத்திற்கு வாழ்த்து கூறியது ,புதிய ருஷியாவை வரவேற்றது.
வானிலும் மண்ணிலும் உலவினான்.அண்டங்களோடு அண்மை கொண்டான்.
ஆர்ப்பாட்டத்தோடு அழுத்தமாக ஜய பேரிகை கொட்டினான்.பயமெனும் பேய்தனை அழித்தான்.
"காக்கை குருவி யெங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையுமெங்கள் கூட்டம்
நோக்குநர் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம்"
என அனைத்திலும் ஒன்றி வாழ வழி கூறினான்.
தேசியக்கவிஞனா ஞானக்கூத்தனார் தீடசயனா காதலனா பக்தனா பித்தனா அனைத்திலும் அனைத்திலும் எம் பாரதி பாரதி பாரதி உலகின் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய பாரதி.

பதிவு : aharathi
நாள் : 11-Dec-14, 8:56 pm

மேலே