எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுபாஷ் சந்திர போஸை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்க மாட்டோம்...

சுபாஷ் சந்திர போஸை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்க மாட்டோம் எனில் அவரை ஆஜர்படுத்தத் தயார்!:மனுதாரர்

சுபாஷ் சந்திர போஸை பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்க மாட்டோம் எனில் அவரை ஆஜர்படுத்தத் தயார் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாரர் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இறுதிக் காலங்கள் குறித்த தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இதுக்குறித்த வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த ஒருவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சுபாஷ் சந்திரபோஸ் 1962ம் ஆண்டு சிறை வைக்கப்பட்டது, 1964ம் ஆண்டு நேருவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டது, 1997ம் ஆண்டு அவர் இந்தியாவில் வாழ்ந்தது இதற்கெல்லாம் ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது என்றும், இப்போது அவரை பிரிட்டிஷ் அரசிடம் அவரை ஒப்படைக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மனுவின் மீதான விசாரணையை 5ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளனர் நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்து செய்திகள்

நாள் : 16-Dec-14, 5:57 pm

மேலே