பாகிஸ்தானில் தாலிபானின் பள்ளிகூட தாக்குதலில் இதவரை 132 பேர்...
பாகிஸ்தானில் தாலிபானின் பள்ளிகூட தாக்குதலில் இதவரை 132 பேர் இறந்ததாக செய்தி . இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் .
காலையில் சீருடை அணிந்து சென்ற பிள்ளைகள் இப்போது சவப்பெட்டியில் ...
ஏன் அனைத்து மத தீவிரவாதிகளும் இன்னும் பெரியதாக , பிரம்மாண்ட தாக்குதல் நடத்தி முழு உலகத்தையும் அழிக்கக் கூடாது ?
எல்லா மத தீவிரவாதிகளும் எதிர்பார்பாது போல் , அவரவர் நாட்டில் அவரவர் கடவுள் மட்டும் இருப்பான் ...என்ன எழவு .. பூமியின் கால் பங்கு நிலம் கூட கடலாய் மாறி இருக்கும் .
அந்த கடல் சிகப்பாக இருக்கும் . அதை மட்டும் பிரிக்கவே முடியாது அவரவர் கடவுளுக்கு சொந்தம் என்று....