எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சட்டாம்பிள்ளை நான் மறுபடியும் பிறந்ததாக நினைவில்லை ஒருமுறை இறந்தது...

சட்டாம்பிள்ளை

நான்
மறுபடியும் பிறந்ததாக
நினைவில்லை
ஒருமுறை
இறந்தது நினைவிருக்கிறது
எல்லோரும்
என்னை பட்டு என்றார்கள்.

@@@@@@@@@

நடுநிசியில்
நான் பிறந்ததாய்
சொன்னார்கள்
எனக்குத் தெரிந்து
நானின்னும் கருவறையில் .....
எல்லோரும் என்னை
இந்திய சுதந்திரம் என்றார்கள்

@@@@@

என்னுடைய
அரசாங்க மாத ஊதியம்
என்னவென்றறிய ஆர்வமில்லை
எனக்குத்தான்
தினசரி ஊதியம் வருகிறதே
எல்லோரும் அதை
லஞ்சம் என்கிறார்கள் .
@@@@@@

ஆமாம்
இதையெல்லாம் கேட்கிறாயே
நீ யார்
ஆண்டவனா ..
பரவாயில்லை நீயும்
லஞ்சம் வாங்குகிறாய் .

சுசீந்திரன்.

நாள் : 18-Dec-14, 9:38 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே