எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று தோழர் ஸ்டாலின் பிறந்தநாள் ------------------------------------------------------ 1924-ல் லெனின்...

இன்று தோழர் ஸ்டாலின் பிறந்தநாள்
------------------------------------------------------

1924-ல் லெனின் மறைவுக்கு பின் பொறுப்பை ஸ்டாலின் தன் தோளில் ஏந்திக்கொண்டார். பொருளாதாரத்தின் மிகவும் பின் தங்கி இருந்த ரஷியாவில் சோசலிச பொருளாதாரத்தை கட்டி உலகில் மிகவும் வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றினார். அதற்கான ஐந்தாண்டு திட்டங்களை ஸ்டாலின் அறிவித்தபோது மேலை நாடுகள் இத்திட்டம் தேறாது என தூற்றினர். ஆனால் அடுத்தடுத்து ஐந்தாண்டு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றினார் ஸ்டாலின். உலகிலேயே முதலாவதும் மிகப் பெரிய கூட்டுப்பண்ணைகளை ஸ்டாலின் உருவாக்கியதும் அந்த ஐந்தாண்டு திட்டத்தில்தான்.

ஸ்டாலின் ஆட்சியில் ரஷியாவில் சோசலிச பொருளாதார வளர்ச்சியை பார்ப்பதற்காக முதலாளித்துவ நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் சோவியத் யூனியனிக்கு பயணம் செய்தனர்.

இந்தியாவில் இருந்து இரவிந்தநாத் தாகூர், கலைவாணர், பெரியார் என பலர் பயணம் செய்தனர். இதில் தாகூர் சென்ற போது, மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தை பரிசோதிப்பதற்கு ஒரு பள்ளிக்கூடத்திற்கு சென்றார்.

தாகூர் தனது பேனாவைக்காட்டி ” இதை ஐந்து ரூபாய்க்கு வாங்கி 10 ரூபாய்க்கு விற்றால் எனக்கு என்ன கிடைக்கும்” என்றார்.

உடனடியாக குழந்தைகள் “ஆறுமாதம் சிறை கிடைக்கும்” என்றனர். ஒரு பொருளை அதன் உள்ளடக்க விலையினை விட அதிகமான விலைக்கு விற்பது அங்கு குற்றமாக கருதப்பட்டது.

ஸ்டாலின் ஆட்சியில் ரஷ்ய முதலாளித்து பூதம் அரண்டு போயிருந்ததை தாகூர் அப்போதே உணர்ந்து கொண்டார்.


பதிவு : selvaravi87
நாள் : 18-Dec-14, 10:03 pm

மேலே