எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றைய காலகட்டத்தில் நான் பலரிடம் பொதுவாக பார்க்கக் கூடிய...

இன்றைய காலகட்டத்தில் நான் பலரிடம் பொதுவாக பார்க்கக் கூடிய ஒரு விஷயம் பற்றாக்குறை .ஆம் எல்லோருடைய மனதிலும் ஏதேனும் ஒரு குறை இருக்கிறது .குறிப்பாக 20 வயதிலிருந்து 27 வயதுக்கு உட்பட்டோரிடம் .எனக்கு கணக்கே வரவில்லை .நான் கருப்பாய் இருக்கிறேன் . என்னிடம் எந்த பெண்ணும் பேச வில்லை .அப்பா எப்போதும் திட்டுகிறார் .என் காதலி பிரிந்துவிட்டாள் . வாங்கும் சம்பளம் போதவில்லை .இல்லை... இல்லை ...இல்லை ..
இதுதான் இன்றைய கோடிக்கணக்கான இளைஞரிடத்தில் கொட்டிக் கிடக்கும் ஒரு குவியல் ..

‪#‎நம்மவர்க்கு‬ கவலை படுவதற்க்கே நேரம் சரியாக உள்ளது .எந்த வேலையுமில்லையென்றால் அந்த நேரத்தினை இந்த வார சோக நேரம் என்று ஒதுக்கிக் கொள்கிறோம் .துணைக்கு சோகப் பாடல்கள் என்று தனியாகவே விற்கும் இசைத்தட்டுக்கள் .இந்த நேரத்தினை நண்பர்களோடு செலவிட மனம் வருவதில்லை. இன்றைய இளைஞரிடம் பார்க்கப்படும் இன்னொரு விஷயம் யாராவது எனக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் .. அதற்காகவே நான் கவலைபட வேண்டும் .. குறிப்பாக எதிர் பாலினமாக இருந்தால் இன்னும் சிறப்பு. கோபமும் சரி கவலையும் சரி எப்போதாவது வந்தால் தான் அதற்கு மரியாதை எல்லா நேரமுமென்றால் சாதாரணமாகிவிடும் .

‪#‎மேற்கூறிய‬ விஷயங்களுக்கு தீர்வு சொல்லுமளவு நான் பெரிய ஞானி அல்ல .ஆனாலும் கவலைகளை தீர்க்க இயலாத அளவு கொடுமை படுத்தப்படும் சமூகத்தில் நாம் இல்லை ..பள்ளிக்கு துப்பாக்கி கொண்டுவந்து சுட்டுக் கொல்வோர் நம்மில் இல்லை. தவறு செய்யும் முன் கண்முன் பெற்றவர் தெரியும் நல்ல சமூகத்தில் தான் இன்னும் நாமிருக்கிறோம் ..!!

‪#‎வாழ்க்கை‬ ஒரு அழகான வரம் அதை நாம் தான் கவலையென்ற போர்வையில் மூடி சாபமாக்கி கொண்டிருக்கிறோம் ..!!

‪#‎விடைகள்‬ இல்லா பல கேள்விகளின் குவியலில் தான் நாம் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் .. தேடலை சுவாரசியம் ஆக்குவதும் சோம்பலாக்குவதும் நம் கைகளில் தான் ..!!

பதிவு : praveen குமார்
நாள் : 25-Dec-14, 9:27 am

மேலே