எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்திய துணிச்சல் கண்டு பாகிஸ்தான் கெஞ்சல்! பதிவு செய்த...

இந்திய துணிச்சல் கண்டு பாகிஸ்தான் கெஞ்சல்!

பதிவு செய்த நாள்
31 டிச
2014
19:44
ஜம்மு: பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய தரப்பில் பதிலடி கொடுக்க துவங்கியதில் 4 பாக்., வீரர்கள் பலியானார்கள். இதனையடுத்து பாக்., தரப்பினர் வெள்ளைக்கொடியை காட்டி தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சினர்.

காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில் உள்ள சர்வதேச நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடந்த 24 மணி நேரத்தில், இரண்டாவது முறையாக அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டது. சர்வதேச எல்லையில் உள்ள பி.எஸ்.எப்., முகாமை குறிவைத்து தாக்கியது.இதில் ஒரு ஜவான் பலியானார். ஒருவர் காயமடைந்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், இரண்டு மடங்கு பதிலடி கொடுக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு படையினரும் கடுமையாக தாக்கினர். இதில் 4 பாகிஸ்தான் ரேஞ்சர்கள் பலியானார்கள். இந்திய தாக்குதலில் சேதம் தொடர்ந்ததை தொடர்ந்து, இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல தாக்குதலை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் வீரர்கள் வெள்ளைக்கொடி காட்டினர். இதனையடுத்து பி.எஸ்.எப்., வீரர்கள் தாக்குதலை நிறுத்தினர்.

இது குறித்து பி.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராக்கேஷ் ஷர்மாகூறுகையில்,சம்பா பகுதியில் சர்வதேச எல்லையில் உள்ள சச்தெகார் என்ற இடத்தில் பி.எஸ்.எப்., முகாம் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலியானார்கள். பலியான வீரர்களின் உடலை அப்புறப்படுத்த தாக்குதலை நிறுத்துமாறு வெள்ளைக்கொடி காட்டி கெஞ்சியதை தொடர்ந்து, தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. பாக்., தாக்குதலில் பலியான இந்திய வீரர், பி.எஸ்.எப்.,பில் ஏட்டாக பணிபுரிந்த ஸ்ரீராம் கவுரியா என தெரியவந்துள்ளதாகவும், ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறினார். பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய முகாமை ஷர்மா, பதிலடி கொடுக்க உத்தரவிட்டதுடன், அவற்றை பார்வையிட்டார்.

இதனிடையே, கதுவா மற்றும் சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பதிலடி கொடுங்க: பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என எல்லை பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவு பிறப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. பாராமிலிட்டரி படை தலைவர் பாதக், ராஜ்நாத் சிங்கை சந்தித்து, தற்போது காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்தும், பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்தும் விளக்கமளித்தார்.

முன்னதாக, இன்று காலை, பாகிஸ்தான் தரப்பில் தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுக்க தயங்க வேண்டாம் எனவும், இரண்டு மடங்கு வேகத்துடன் தாக்குதல் நடத்த வேண்டும் இந்திய பாதுகாப்பு படையினருக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கர் உத்தரவிட்டிருந்தார்

நன்றி -தினமலர்

நாள் : 31-Dec-14, 8:17 pm

மேலே