அங்கிள் நான் ஒரு கவிதை சொல்லட்டுமா ........?? கடற்கரையில்...
அங்கிள் நான் ஒரு கவிதை சொல்லட்டுமா ........??
கடற்கரையில் என்னிடம் ஒரு சிறுவன் ...!
" நீயே ஒரு கவிதை தான் டா.. செல்லம் " என்றேன் .
" ஐயோ அங்கிள் ரொம்ப பழைய டைலாக் " எனக்கு நோஸ் கட் ..........!! :(
சரி டா குட்டி சொல்லுடா ......
சொல்ல ஆரம்பித்தான் .........!
கடல் ............கடல் ...........கடல்
அதை விட்டு பிரிந்த மீன்கள்
தரையில் கருவாட்டு கொலை .
அது கொலை இல்ல
கொலை இல்ல
தற்கொலை ..!
ஆமா.... அங்கிள்.......!
கடல நிறையா
உப்பு தண்ணி குடிச்சு
மீனுக்கு ரோசம் வந்துச்சு...........!!
கட்டிபிடித்து முத்தம் கொடுத்தேன் அந்த குட்டி பாரதிக்கு ...........!
-இரா.சந்தோஷ் குமார்