ரகசியமாக நடந்த யுவன்சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமணம் தமிழ்த்...
ரகசியமாக நடந்த யுவன்சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமணம்
தமிழ்த் திரையுலகில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனான இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் இசையமைத்துவிட்டார். பிரியாணி அவரது இசையமைப்பில் வெளிவந்த 100வது படமாகும். தனது தந்தை இளையாராஜா போன்று இவரும் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார். கடந்த 2005ம் ஆண்டு சுஜாயா என்கிற பாடகியை காதல் திருமணம் செய்த யுவன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.
அதன்பிறகு லண்டனைச் சேர்ந்த ஷில்பா என்பவரை 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால் இந்த திருமண பந்தமும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு, ஷில்பா இவரை பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. தனது அம்மாவின் மரணம், இரண்டாவது மனைவியுடன் சலசலப்பு என மிகுந்த மனக்கஷ்டத்தில் இருந்த யுவன், திடீரென இஸ்லாம் மதத்துக்கு மாறினார். மதம் மாறியவுடன் யுவன் தனது பெயரைக் கூட அப்துல் ஹாலிக் என்று மாற்றியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் யுவனுக்கும் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த சப்ரூனுக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்களுடையே நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் திருமண தேதி எப்போது என்கிற தகவல்கள் எல்லாம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. சப்ரூன் துபாயில் ஆடை வடிவமைப்பாளராக இருக்கிறார்.
இந்நிலையில் யுவன்-சப்ரூன் திருமணம் கீழக்கரையில் நேற்றிரவு ரகசியமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் மிக முக்கியமான உள்ளூர் பிரமுகர்கள், ஜமாத் நிர்வாகிகள் பங்கேற்றனர். யுவனின் தந்தை இளையராஜா கலந்து கொள்ளவில்லை. எனினும், யுவனின் சகோதரியான பவதாரணி அவரது கணவர் சபரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யுவன் நேற்று வரைக்கும் இந்த தகவலை யாருக்கும் சொல்லவில்லையாம். திடீரென அவருக்கு திருமணம் நடந்திருப்பதை அரசல் புரசலாக கேள்விப்பட்ட அவரது நண்பர்கள் யுவன் நமக்கு கூட சொல்லலையே என்று அதிர்ச்சியாகியிருப்பதாக தகவல்.