ohideen 11:40am Jun 10 நீ இல்லாமல்... அடிக்கடி...
ohideen 11:40am Jun 10
நீ இல்லாமல்...
அடிக்கடி புரட்டுவதால் முகபுத்தக பக்கங்களும்
கிழியதொடங்குகிறது...
நொடி முள் நகரும்போது எழுப்பும் சப்தம்...
வெடி சப்தமாகியது....
அடிக்கடி தாகிக்கிறது...
குவளையில் நீர் நிரப்பாமல் பருகுவதால்....
அடிக்கடி பசியும் எடுக்கிறது...
உணவிருந்தும்... கையால் காற்றை பிசைந்து உண்பதால்...
நேரம் பின்னோக்கி செல்கிறது...
கால்கள் இடறுகின்றது..
நினைவுகள் மொத்தமும் சிறைபிடிக்கபட்டுள்ளது...
யாரேனும் வந்து தொடும்போது மட்டுமே..
ஆறு அறிவுகளில் ஒன்று மட்டுமே செயலில் உள்ளதை உணரமுடிகிறது....
கடைசியில் நானும் உலாவ வேண்டியதாயிற்று... பித்தர்களோடு பித்தனாய்... நீ இல்லாமல்....