எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காவிரி ஆற்று பிரச்சனை தீவரமாக இருந்தபோது எழுதிய என்...

காவிரி ஆற்று பிரச்சனை தீவரமாக இருந்தபோது எழுதிய என் முதல் கிறுக்கல்...
1-5-2012


வித்துக்கள் விதைத்து
முத்துக்கள் பல
தரித்தான் விவசாயி
இப் பாரத நாட்டிலே - அந்தக் காலம்...


காட்டாற்று வெள்ளம் போல்
ஆறுகள் நிறைந்தும்
கண்ணீர் விட
ஒரு சொட்டுத் தண்ணீருக்காக
கையேந்தி நிற்கும்
அவல நிலையிலே
விவசாயி
இப் பாரத நாட்டிலே - இந்தக் காலம்...

பச்சை சேலை
கட்டிய எங்காத்தா
அழகோ அழகு - அந்தக் காலம்...

முந்திக் கசங்கி
வறண்ட வயலா
நிக்குறா எங்காத்தா - இந்தக் காலம்...

பிம்பம் விழும்
பொழுதிலே
இடுப்பிலே
துண்டக் கட்டி
ஏர் புடிச்சி
விதை விதைச்சி
உழுத விவசாயி
நெஞ்சிலே கசப்பு
வயிற்றிலே நெருப்பு....


விவசாயி ஒரு வேலை
இட்டிலிக்காக
இட்லியுடன் சட்னிக்காக
கிட்னியை விற்கும்
அவலம் இந்நாட்டிலே - இந்தக் காலம்...

இதை அறியாத
அரசியல் வாதிகள்
2020-லே இந்திய வல்லரசு
2025-லே நல்லரசு
2030-லே வெற்றியரசு...

என்ன ஒரு
வேடிக்கையடா இது...?

இப்படி இருப்பின்
உயர்ந்தோரின் கனவு
என்னாவது...?

உயர்ந்தவரின்
லட்சியக் கனவை
நினைவாக்க
வாரீர்...
வாரீர்...
வாரீர்...





நாள் : 5-Jan-15, 9:39 pm

மேலே