எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதுகு தண்டுவட சவ்வு பாதிப்புக்கு அதிநவீன சிகிச்சையில் நிவாரணம்...

முதுகு தண்டுவட சவ்வு பாதிப்புக்கு அதிநவீன சிகிச்சையில் நிவாரணம்

சேலம்: சேலம் மெடிக்கல் சென்டர் ஆஸ்பிடலில், முதுகெலும்பு தண்டுவட சவ்வு பிதுங்கலால் ஏற்படும் பிரச்னைகளுக்கு, நவீன சிகிச்சை முறை மூலம் அறுவை சிகிச்சை இன்றி தீர்வு காணப்படுகிறது.

சேலம் மெடிக்கல் சென்டர் ஆஸ்பிடல், வலி நிவாரண நிபுணர் டாக்டர் பிரபுதிலக், நிருபர்களிடம் கூறியதாவது: முதுகெலும்பு தண்டுகளின் ஊடாக இடம் பெற்றுள்ள சவ்வுகளில் மாற்றம், வீக்கம் ஏற்பட்டு, அது பிதுங்க நேரிடுகிறது. பல்வேறு காரணங்களால் சவ்வுகள் பிதுங்கி, நுட்பமான நரம்புகளை அழுத்துவதால், கடுமையான வலி உருவாகும். நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதுடன், அதிகம் பாதிக்கப்பட்டவர்களை முடக்கிவிடும். எந்த வயதினருக்கும் ஏற்படும் இந்த பாதிப்புக்கு, அறுவை சிகிச்சை மட்டுமே நிவாரணமாக இருந்து வந்தது. அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள் காலம் முழுவதும், மருந்து, மாத்திரை மற்றும் வலியுடன் வாழ வேண்டிய நிலை இருந்தது. இவர்களுக்கான தீர்வாக, 'டிரான்ஸ்பராமினால் எண்டோஸ்கோபிக் டிஸ்கெக்டெமி' என்ற நவீன சிகிச்சை முறை, மேலை நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான சிகிச்சை முறை மற்றும் அதிநவீன கருவிகளை இயக்கும் முறையை கற்று வந்து, தற்போது, சேலம் மெடிக்கல் சென்டர் ஆஸ்பிடலில் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம். இந்த சிகிச்சை பெற்றவர், மறுநாளே வீடு திரும்புவதோடு, இயல்பு வாழ்க்கை வாழ முடியும். இதில், எவ்வித பக்க விளைவுகளும் இல்லை. இதில், பிதுங்கிய சவ்வு வெட்டப்பட்ட நிலையிலும், இம்முறையில் அதை அகற்ற முடியம். இதே போல், தண்டுவடம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்னைகளுக்கு, நவீன சிகிச்சை முறை துவங்கப்பட்டுள்ளது. இதில், ஊசி போன்ற கருவியின் வாயிலாக, உடைந்த மற்றும் விரிசல் ஏற்பட்ட எலும்பினுள், 'போன் சிமென்ட்' செலுத்தி, அதை உறுதி செய்யலாம். மேலும், வலி நிவாரண துறையில், பல்வேறு பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு வழங்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

நாள் : 7-Jan-15, 9:57 am

மேலே