எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் நடிகை குஷ்புவை...

பிஜேபி தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் நடிகை குஷ்புவை யார் என்று தெரியாது என்று சொல்லிவிட்டாராம். தன்னை இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் தெரியும் என்று குஷ்பு கூறியதோடு,பிஜேபி தலைவர் தமிழிசையை அவர் வாழும் பகுதி மக்கள் மட்டுமே அறிவார்கள்,அவர் என்னைத் தெரியாது என்று கூறுவது வருத்தமாக உள்ளது என்றும் கூறி உள்ளார். குஷ்பு திருமணம் ஆவதற்கு முன் பெண்கள் உடல் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று கூறிய செய்தி உலக மக்கள் அனைவருக்கும் விவாதிக்கப்படும் செய்தியாக மாறியது உண்மைதான்.அதற்காக குஷ்பு தன்னை அகில உலகமும் புகழ் பெற்ற அரசியல் தலைவர் என்ற கூறிக்கொள்ள முடியுமா? காங்கிரசின் பல சிறந்த முன்னாள் தலைவர்களெல்லாம் இன்று இருக்கும் இடம் தெரியாமல் அமைதியாக உள்ளார்கள். அவர்களை எல்லாம் குஷ்புவுக்குத் தெரியுமா?
உலக மக்களே அறிந்த குஷ்புவை திமுக கை கழுவிய காரணம் என்ன?

பதிவு : அருண்ராஜ்
நாள் : 8-Jan-15, 9:05 pm

மேலே