எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"முஸ்லிம்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய நவீன கண்டுபிடிப்புக்கள்"! உலகின் பலநூறு...


"முஸ்லிம்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய நவீன கண்டுபிடிப்புக்கள்"!

உலகின் பலநூறு அரிய கண்டுபிடிப்புக்களை முஸ்லிம்களால் சம கால உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் அவைகளில் பலபின்னர் மறைக்கப்பட்டதுடன் அதைகாப்பி (Copy) பண்ணியவர்கள் தம்மால்தான் இது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டதுடன் அவர்களின் பெயர்களே சரித்திரத்தில் இடம்பெற்றும் விட்டது. அவ்வாறான ஒருசில கண்டுபிடிப்புக்களின் உண்மைத்தன்மையை பார்ப்போம்.

14 ஆம் நூற்றாண்டளவில், காலித் என்ற எதியோப்பியாவின் ஆட்டுஇடையன், தனது ஆடுகள் ஒருகுறித்த பழத்தை சாப்பிட்டவுடன் புதுத்தெம்புடன் செல்வதை அவதானித்தான். பின்னர் அவன் அந்த பழக்கொட்டைகளை சூடாக்கி அருந்திப்பார்த்தான். அவனுக்குள்ளும் புத்துணர்ச்சி ஏற்படுவதை உணர்ந்தான். அவன் அருந்தியதுதான் உலகின் முதலாவது காஃபி (Coffee).

இது எத்தியோப்பியா முழுவதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டில் மக்காவுக்கு யாத்திரை செல்வோர் , இரவு வணக்கங்களுக்கு நித்திரைவிழிப்பதற்காக இதை அங்கு கொண்டுசெல்ல, அந்த நேரத்தில் மக்காவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த துருக்கியர், அதனை மிகவும் விரும்பி அருந்தினர். பின்னர் 1645 இல் துருக்கியில் இருந்து வர்த்தக நோக்கத்துக்காக இத்தாலியின் வெனிசுக்கு இந்த காஃபி ஏற்றுமதி செய்யப்பட்டது. அது பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகெங்கும் பரவியது.

பெயர்கூட அரபியின் கவ்வா, துருக்கியின் கொவ்வே என்று மருவி பின்னர் அதுவே இத்தாலியின் கஃபே (caffe) யாகி, ஆங்கிலத்தில் காஃபி (Coffee) யாகியது.உண்மையில் ஓர் உருவத்தை பார்க்க வேண்டுமானால் உருவத்திற்கே ஒளி இருக்கவேண்டும்.

10 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்கர்கள் கண்ணில் இருந்து ஒளி உருவத்தை நோக்கி செல்வதாகவும் அதனால்தான் கண்ணால் பார்க்கமுடிகிறது என்று நம்பிய காலங்களில், அதே நூற்றாண்டில் அரேபியாவில் வாழ்ந்த புகழ்பெற்ற வான சரித்திர ஆய்வாளரும், கணக்கியல் நிபுணருமான இப்னு ஹைதம் என்பவர் ஒரு முறை தனது அறையில் தூங்கிக்கொண்டு இருந்தபொழுது ஒரு ஜன்னலின் சிறிய துவாரத்தினூடாக சென்ற வெளிச்சம் எதிர்பக்க சுவர்களில் பாரியளவில்பிம்பமாக தோன்றுவதை அவதானித்தார். அதைவைத்து ஆராய்ச்சி செய்த அவர், துவாரம் சிறியதாகிற போது, பிம்பங்களின் தரம் அதிகரிப்பதை கண்டுபிடித்தார்.

அதுவே அவர் முதலாவது கேமராவை (Camera) கண்டுபிடிக்க காரணமாகியது. Qamara என்றஅரபு சொல்லின் அர்த்தம் இருட்டு என்பதாகும்

.செஸ் (Chess) என்பது பண்டைய இந்தியாவில் ஆடப்பட்டு இருந்தாலும், அதன் இன்றைய வடிவத்தை கண்டுபிடித்தவர்கள் பாரசீகர்கள்.

பின்னர் அந்த ஆட்டம் இஸ்லாமிய ஸ்பைனுக்கு கொண்டு செல்லப்பட்டதால் ஐரோப்பியாவில் பிரபல்யமடைந்தது.

ரைட் சகோதரர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய ஸ்பெயினில் வாழ்ந்த அப்பாஸ் இப்னு பிர்னாஸ் என்ற முஸ்லிம் பொறியியலாளர்மனிதனால் பறக்க முடியும் என்று சிறு வயது முதல் உறுதியாக நம்பினார். இதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இறுதியாக 852 ஆம் ஆண்டு பாரசூட் போன்ற விமானத்தை உருவாக்கி தமது தலைநகரில் இருந்த பெரிய பள்ளிவாசலின் மினாரத்தில் இருந்து தலைநகரை (Cordoba) ஒரு சிறிய வலம் வந்தார்.

எனினும் இது பெரியளவில் சாத்தியமாகவில்லை. இருபது வருடங்களாக அதிலுள்ள நெளிவு சுளிவுகளை கற்றறிந்து 875 ஆம் ஆண்டு ஒரு பெரிய மலையில் இருந்து குதித்து 10 நிமிடங்கள் வெற்றிகரமாக பறந்து காட்டினார்.

அந்த நேரம் அவருக்கு வயது 70. இதை கௌரவிக்கும் முகமாக இன்றும் பாக்தாத் விமான நிலையத்தில் ஓர் நினைவுஸ்தூபி இருப்பதும், சந்திரனின் வளைவினை அளக்கும் குறியீடாக Ibn Firnas என்ற அளவுகோல் பாவிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

சுத்தம் ஈமானில் (இறை நம்பிக்கை) பாதி என்று இஸ்லாத்தில் சொல்லப்படுகிறது.

அதனைக் கருத்தில் கொண்டு தாவர எண்ணெய்யையும், சோடியம் ஹைட்ரோக்சைட் ஒன்று சேர்த்த இன்றைய சோப்பு (Soap) எகிப்தியர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.இவர்களே இன்றைய ஷாம்பூ (shampoo) வையும் கண்டுபிடித்தனர்.Crankshaft எனப்படும் வாகன இஞ்சினில் இருக்கும் சக்கரத்தை ஒரு குறிப்பிட்ட வேகத்தில்சுழல வைக்கும் இயந்திரம் அல்- ஜசாரி என்ற பொறியியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது

.இதுவே பிற்காலத்தில் அனைத்து வகையான மோட்டார் வாகன உற்பத்திக்கு உந்து சக்தியாகமாறியது.

இவரே இன்றைய வாகனங்களின் பிஸ்டன் (piston) மற்றும் வால்வுகளின் (valves) முன்னோடி.

10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அல்-சஹ்ராவி என்ற மருத்துவரே இன்றைய சத்திரசிகிச்சைகளின் (Surgical Treatment) முன்னோடியாவார்.

இன்றைய நவீன சத்திர சிகிச்சையில் பாவிக்கப்படும் 200 ற்கும் மேற்பட்ட கருவிகள் அன்று அவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.

மேலும் வில்லியம் ஹாவிக்கு 300 வருடங்களுக்கு முன்பாகவாழ்ந்த இப்னு நபிஸ் என்ற மருத்துவர் மனிதனின் இரத்த சுற்றோட்டத்தை (Blood Circulation) கண்டுபிடித்தார்.

இதற்கும் மேலதிகமாக இவர்களே மயக்கமடைய செய்தல் (Anesthetics) முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.காற்றாடி மூலம் நீர் இறைத்தல் முறை, உலகிற்கு 634 ஆம் ஆண்டு வாழ்ந்த பாரசீக கலிஃபாவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டிலேயே இது ஐரோப்பாவில் புழக்கத்திற்கு வந்தது.தடுப்பூசி ஏற்றும் முறையை லூயிஸ் பாய்ச்சர் கண்டுபிடித்ததாக உலகம்நம்புகிறது.

ஆனால் அது முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டு 1724 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்த ஆங்கிலேய தூதுவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகே ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

. சின்ன அம்மை போன்ற நோய்களுக்காக சிறு பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றுதல் முறை ஐரோப்பியர்களுக்கு ஒருநூற்றாண்டிற்கு முன்பாகவே துருக்கியில் வழக்கத்தில் இருந்துவந்தது.

மையை தொட்டு எழுதும் முறையில் இருந்து மையை பேனாவிற்குள் கொண்ட fountain pen யை கண்டுபிடித்தவர் 953 ஆம் ஆண்டு வாழ்ந்த எகிப்தின் மன்னராகும்.அல் –ஜிப்ராவை பற்றி பெரிதாக சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். இதனை கண்டுபிடித்த அறிஞர் அல்- கவாரிஸ்மி ஆவார்.

இவரின் பிரபல்யமான புத்தகத்தின் பெயரே அல்- ஜிப்ரா வல் முகாபிலா.

அதுவே அல்- ஜிப்ராவாக மாறியது. இதற்கு மேலதிகமாக இவருடன் சேர்ந்து இருந்த அல்- கிந்தி எனும் கணக்கியலாளர் cryptology ஐ கண்டுபிடித்தவர்.

சிர்யாப் என்று புனைப்பெயரால் அழைக்கப்படும் அலி இப்னு நாபி என்பவரே இன்றைய கண்ணாடியை கண்டுபிடித்தவர்.

9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களே இன்றைய காசோலை (Cheque) முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள்.

பல நாடுகளுக்கும் சென்று வர்த்தகம் செய்யும் இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து தமது பணத்தை பாதுகாப்பதற்காகவே இதனை அறிமுகம் செய்தனர்.

அரபியின் saqq என்ற வார்த்தையே cheque என்று மருவியது. அன்று சீனாவில் பணத்தை வைப்பு செய்துவிட்டு பக்தாத்தில் மீளப்பெறும் முறை முறை இருந்திருக்கிறது

.கலிலியோ கலிலி உலகம் உருண்டை என்றும் சூரியனை உலகம் ஓர் நேர்கோட்டில் சுற்றிவருவதாகவும் கூறுவதற்கு 500 வருடங்களுக்கு முன்பாகவே மாபெரும் வானவியலாளர் இப்னு ஹசம் இதனை கூறிவிட்டார். 9 ஆம் நூற்றாண்டிலேயே உலகின்சுற்றளவு 40,253.4 km என்று எழுதியும் வைத்திருந்தார்.

(40,075.16Km என்று தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்)அல்- இத்ரீஸ் என்பவரே உலக வரைபடத்தை முதலில் வரைந்தவர்குறிப்பு:-----------

இதற்கும் மேலதிகமாக பல நூறு கண்டுபிடிப்புக்கள் நிச்சியமாக இருக்கின்றன

.இஸ்லாமிய ஸ்பெயினின் (அந்தலூசியா) வீழ்ச்சியும், பாக்தாத் மீதான மங்கோலிய படையெடுப்பும் முஸ்லிம்களின் அறிவியலின் ஒட்டுமொத்தஅழிவுக்கு காரணமாகியது.

அந்தலூசியா வீழ்ச்சியடைந்து முஸ்லிம்கள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டாலும் அங்கிருந்த அறிஞர்கள் வெறியேற அனுமதிக்கப்படவில்லை.

அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு அங்கிருந்த அனைத்து (100%) நூல்களும் மொழிமாற்றம் செய்து தருமாறு வற்புறுத்தப்பட்டனர். அனைத்து நூல்களையும் மொழி மாற்றுவதற்கு மட்டும் 4 வருடங்கள் சென்றது. அதன் பின்னர் original நூல்கள் அனைத்தும் முற்றாக எரித்து சாம்பலாக்கப்பட்டன

.அதைப்போல அப்பாசியர்களின் காலம்முதல் அறிவியலின் சிகரமாக விளங்கிய பாக்தாத் மங்கோலியர்களால் முற்றுகையிடப்பட்ட வேளை, பாக்தாத் நூலகத்தில் இருந்த இலட்சக்கணக்கான புத்தகங்களை (எத்தனை இலட்சம் என்பது இன்றுவரை தெரியாமல் இருக்கிறது) டைக்ரீஸ் நதியில் வீசி எறிந்தனர்.

புத்தகங்களின் மையினால் அந்த நதி கருப்பு நிறமாக மாறியதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்.இந்த இரண்டு சம்பவங்களும் நடைபெற்றிருக்காவிட்டால் நாம் காணும் இன்றைய உலகு வேறுவிதமாக இருந்திருக்கக்கூடுமோ?

பதிவு : ANBU MALLIGAI
நாள் : 11-Jan-15, 10:49 am

மேலே