அம்மான்னா சும்மா இல்ல... சிலி நாட்டில் ஒரு வீட்டில்...
அம்மான்னா சும்மா இல்ல...
சிலி நாட்டில் ஒரு வீட்டில் திடீரென்று தீ பிடித்து கொண்டது.கார் குண்டு வெடித்ததால் அந்த தீ விபத்து ஏற்பட்டது.அந்த வீட்டில் ஒரு நாயும் பிறந்து 15 நாட்களே ஆன நாய் குட்டிகளும் இருந்தது.
அமெண்டா என்ற அந்த நாய் தான் ஈன்ற குட்டிகளை நெருப்புக்குள் பாய்ந்து ஒவ்வொன்றாக வாயால் கவ்வி எடுத்து கொண்டு வந்து தீ அனைப்பு வாகனத்தில் வைத்து காப்பாற்றியது.
தீ அனைப்பு வீரர்கள் அந்த நாயின் செயலை ஆச்சரியமாக பார்த்தனர்.எல்லா நாய் குட்டிகளையும் காப்பாற்றிய அமெண்டா குட்டிகளின் பயத்தை போக்க அவைகளை அணைத்தபடியே படுத்து கொண்டு இருந்தது.
ஒரு நாய் குட்டி மட்டும் தீ காயத்தால் பாதிக்கப்பட்டு இருந்தது.கால்நடை மருத்துவருக்கு போன் செய்து அந்த நாய் குட்டிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர்.
எங்கு பார்த்தாலும் வெடி குண்டு கலாச்சாரம் .இந்த நாய்க்கு இருக்கும் தாய் பாசம் கூட வெடிகுண்டு வைக்கும் அந்த ஆறறிவு மிருகங்களுக்கு இருப்பதில்லை.