எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பால்வாடி கூடத்து சத்துணவு மாவு உருண்டைக்கான சண்டையிலிருந்து ........

பால்வாடி கூடத்து சத்துணவு மாவு உருண்டைக்கான சண்டையிலிருந்து .....
அணில் குஞ்சை கையிலேந்தி அதன் கூட்டில் மீண்டும்
இறக்கிவிடும் இரக்க குணத்திலிருந்து .....
உனக்கு பிடித்த கடலை மிட்டாய் நானும்
எனக்கு பிடித்த கமர்கட்டு நீயும்
வாங்கியமர்ந்த வகுப்பிலிருந்து ........
என் தாயின் மருத்துவ செலவை நீ ஏற்றதிலிருந்து ....
உரிய நேரத்தில் எனக்கு அம்பேத்காரையும் பெரியாரையும்
மார்க்சையும் பரிட்சியப்படுத்தியதிலிருந்து ......
ஈழத்துப் இனப்படுகொலைக்கு எதிராக ஒன்றிணைந்த அன்றிலிருந்து .....
இயறகை வேளாண்மையை பரப்பிய வெருமுடம்பு
வெண்தாடி பச்சை கிழவனின் பயிற்சி பட்டறையிலிருந்து ......
அணுஉலை எதிர்க்கும் கூடங்குளம் .மக்களுக்கான
ஆதரவு கூட்டத்திலிருந்து ......
நீர்நிலை வனம் சூழலியல் அழிப்புக்கு எதிராக திரட்டிய அணியிலிருந்து ......
சக மனிதராக மாற்று பாலினத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலிருந்து .......
உலகை கரைக்கவல்ல அன்பையும் அறத்தையும் எனக்கு அடிப்படை பண்பாக
அறிமுகப்படுத்தியதிலிருந்து .......
தெருமுனையில் ஏதோ ஒரு தேநீர்கடையிலிருந்து
துவங்கியிருக்கலாம் நமக்கான உலகம் ......


நட்பின் வழி என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய
உங்கள் அனைவரையும் இன்முகத்தோடு
இந்த இரு மனம் இணையும் நிகழ்விற்கு .
அன்புடன் அழைக்கிறோம் .......தமிழ்தாசன் -----துர்காதேவி .

நாள்: 25.01.2015 காலை 10.30மணி
இடம்:தங்க சாமி அம்பலம் -கருப்பாயி அம்மாள் திருமண மாளிகை
வண்டியூர் கல்லானை திரையரங்கம் பின்புறம்
மதுரை .


அன்பானவர்களே
எனது பாசத்திக்குரிய செயல் வீரன் தோழ தமிழ்தாசன் திருமணத்திற்கு வாருங்கள்

மதுரை வாழ் தோழர்கள் அவசியம் வாருங்கள்


(தோழா என் உடல்நிலை நன்றாயில்லையே ............என் செய்வேன் .. நலம் பெற்றவுடன் வலம் வருவே உன் வாசலுக்கு ..........
வாழ்த்துக்கள் தோழா ......பலம் ...நலம் ......வளம் பெற்றுயர உளமார வாழ்த்தி மகிழ்கிறோம் ------அமிர்தகணேசன் -.காஞ்சனா ...........

பதிவு : agan
நாள் : 23-Jan-15, 11:14 pm

மேலே