எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொலைத்தவற்றை தேடியே முடிந்து போனது... வாழ்க்கை.! ........................................................................................... சாவுக்கு...

தொலைத்தவற்றை
தேடியே
முடிந்து போனது...
வாழ்க்கை.!
...........................................................................................

சாவுக்கு வந்தவர்கள்
எல்லாம் போனபிறகு
ஞாபகத்தில் வந்தார்...
செத்துப்போன அப்பா.!
......................................................................
கொடுத்த கடனை
வசூலிப்பதை விட
வாங்கிய கடனை
சமாளிப்பதில்தான்
இருக்கிறது...
வீரம்.!
....................................................................................
தோல்வி தந்த காதலிகளை
நினைக்கும்போது
திருப்தியாகத்தான் இருக்கிறது...
கமலஹாசனின்
ஓடாத படங்கள் போல.

நாள் : 28-Jan-15, 5:10 pm

மேலே