முகனூலில் ரங்கநாயகி என்பவர்க்கு 20 unit இரத்தம் அவசர...
முகனூலில் ரங்கநாயகி என்பவர்க்கு 20 unit இரத்தம் அவசர தேவை என்று ஒரு தகவல் பகிர்தல் இருந்தது . (நன்றி : ரொபினா )
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இரத்தம் கொடுக்க சென்னை அப்போல்லோ மருத்துவமனை க்கு நேற்று சென்று இருந்தேன் ... அங்கு ,,
எனக்கு முன்பு 6 பேர் .. அவர்கள் அனைவரும் .. ரங்கா நாயகி அம்மாவிற்கு இரத்தம் வழங்க வந்தவர்கள் . அவர்களக்கு தகவல் கொடுத்த தளம் .. Facebook .
அந்த ஆறு பேர் மட்டும் அல்ல . நான் தானம் கொடுத்து வரும் வரை இளம் வயது ஆடவர்கள் வந்துக்கொண்டே இருந்தார்கள் ... அனைவரும் ஐ.டி துறையை சாரந்தவர்கள் , முகநூல் மூலம் செய்தி அறிந்து வந்தவர்கள் . சில மணி நேரம் விடுப்பு எடுத்தாலும் ... சம்பளத்தில் கணிசமான தொகை பிடித்தம் செய்ய கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் .. பணம் என்பதை விட மனிதாபிமானம் பெரிது என்று வந்த அவர்களை நான் தெய்வமாக தான் பார்த்தேன் .
==இரத்த தானம் செய்வதற்கு முன் .. குறைந்த பட்சம் 1 மணி நேரத்திற்கு முன் எதையும் சாபிட்டு இருக்க கூடாது ==. புகை பிடித்து இருக்க கூடாது ..
==மது 24 மணி நேரம் முன்பு வரை அருந்தி இருக்க கூடாது
==அஸ்பிரின் உள்ளிட்ட வலி நிவாரணி மாத்திரைகள் 72 மணி நேரத்திற்கு முன் எடுத்து இருக்க கூடாது ..
என்பன போன்ற எல்லா வழிமுறைகளும் தெரிந்த இரத்த கொடையாளர்கள் அவர்கள்.
முகநூல் உண்மையில் சமூக தளம் தான் .... !
உடனுக்குடன் செய்தி தந்து ... உடனடி உதவி கிடைத்திட வாய்ப்பு உருவாக்கும் அதி அற்புத கருவி .......!
-இரா.சந்தோஷ் குமார்