"ஒரு மனுஷன் கொட்டாவி விடும்போது , அவன் வாயிலிருந்து...
"ஒரு மனுஷன் கொட்டாவி விடும்போது , அவன் வாயிலிருந்து வெளிப்படுற காற்றுக்கு , அதாவது அந்தக் காற்றின் வேகத்துக்கு , ஒரு விமானத்தையே நகர்த்திவிடும் சக்தி உண்டு...!!" , சுஜா...
இதைக்கேட்டு பயங்கர அதிர்ச்சியான சுஜாவின் அம்மா , "எங்கடி உக்காந்து யோசிக்கிறே இதெல்லாம்.?"
"அதோ அந்தக் கடசில..."
'முதல்ல வீட்ட மாத்தணும்' ... யோசிச்ச அம்மா , "அது சரிடி ... ஒருத்தன் கொட்டாவி விட்டதுக்கே ப்ளைட் நகருதுன்னா , ப்ளைட்டுக்குள்ள உக்காந்துட்டு இருக்குற அத்தனை பேரும் ஒட்டு மொத்தமா ஒரே நேரத்துல கொட்டாவி விட்டா என்னடி ஆகும்.?"
"ம்ம்... அதை பத்தி தான் think பண்ணிட்டு இருக்கேன்... பண்ணி முடிச்சுட்டு சொல்றேன் மம்மி..." , சுஜா...
..........................................
'சுஜா கதைகள்'
மீண்டும் தொடர இருக்கிறேன் நண்பர்களே...
- கிருத்திகா தாஸ்...