**அம்மா** 'அது... அது... அம் .. அம்மா....அம்மாதான்..அம்மாவேதான்..' 'அம்மா.......
**அம்மா**
'அது... அது... அம் .. அம்மா....அம்மாதான்..அம்மாவேதான்..'
'அம்மா.... எத்தனை வருஷம் ஆச்சும்மா உங்களைப் பார்த்து..'
'எப்படி மா, எப்படி மா என்னை அனாதையா விடறதுக்கு உங்களுக்கு மனசு வந்தது..'
'அந்தச் சின்ன வயசுல..எத்தனை கஷ்டப்பட்டேன் தெரியுமா மா.'
'எந்த இடத்துல இருக்கேன்னு கூடத் தெரியாம சுத்தித் திரிந்தேன் மா..'
'என்னை விட உங்க புதுக்கணவர் உங்களுக்கு முக்கியமா போய் விட்டாரே மா..'
'அவர்தான் மா, அவர்தான் , உங்க புதுக் கணவர்தான் , என்னை எங்கேயோ கொண்டு போய் விட்டுட்டு , வீட்டுக்குத் திரும்பி வந்தா உங்களைக் கொலை செஞ்சுருவாருனு மிரட்டினாரு மா ..'
'அனாதையா திரிஞ்சேன் மா.. உங்களுக்காகத்தான் மா நான் திரும்ப வீட்டுக்கு வரலை....'
'அம்மா.. அம்மா...'
'உங்களுக்குக் கூட என்னைத் தேடிக் கண்டுபுடிக்கனும்னு தோணவே இல்லையா மா..'
'இப்போ... இங்க... இத்தனை வருஷம் கழிச்சு..'
'உங்களுக்கு என்னை அடையாளம் தெரியுமா அம்மா..?'
'உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கா மா..'
'அம்மா.. உங்க கூட பேசணும்னு ஆசையா இருக்கு மா..'
'உங்க கணவர் முன்னாடி,உங்க குழந்தைங்க முன்னாடி உங்களுக்கு நான் உங்ககூட பேசறது புடிக்கலைனா ..?
'புடிக்கலைனா..'
'அது எப்படி புடிக்காம போகும்.. நானுன்னா உங்களுக்கு ரொம்பப் புடிக்குமே மா..நான் பேசுவேன்.நான் பேசுவேன்..'
""சொல்லுங்க மேடம், என்ன சாப்பிடுறீங்க..!!!""
- கிருத்திகா தாஸ்...