சேரிடம் அறிந்து சேர் ---------------------------------------- சேவல்களே..! கூவுவதை நிறுத்துங்கள்...
சேரிடம் அறிந்து சேர்
----------------------------------------
சேவல்களே..!
கூவுவதை நிறுத்துங்கள்
ரிங்டோனில் விடிகிறது
எங்கள் உலகம்.
மேகங்களே..!
பொழிவதை நிறுத்துங்கள்
பிளாஸ்டிக்கில் மூடப்படுகிறது
எங்கள் பூமி.
மாடுகளே.!
விவசாயம் செய்யாதீர்கள்.
மாத்திரைகளில் பசியாறுகிறது
எங்கள் வயிறு.
எப்படியாவது மீண்டும்
மனித குலத்தோடு
சிநேகமாக உறவாட
வேண்டுமோ ?
நண்பர் விண்ணப்பம்
அனுப்புங்கள்
முகநூலில் பரிசீலிக்கிறோம்.
-இரா.சந்தோஷ் குமார்.
# ஒரு வருடத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட பதிவு.