---------------------- புதிய படைப்பாளிகளை தேடி ... மார்ச் மாத...
---------------------- புதிய படைப்பாளிகளை தேடி ... மார்ச் மாத கவிதை விமர்சனங்கள் ----------------
நேற்றைய பதிவினை தொடர்ந்து தம்பி ராஜ்குமார் , மார்ச் மாதம் இரண்டாம் தேதி பதியும் கவிதைகளை வாசித்து , அதில் சிறந்த புதிய படைப்பாளியை , சமீபங்களில் வந்த நல்ல கவிஞரை நமக்கு காட்ட முன் வந்துள்ளார் .
மார்ச் ஒன்று ,டாக்டர் கன்னியப்பன் ஐயா , ஆற்ற இணைந்துள்ளார் .
இருவரையும் இந்த பணி செய்ய முன் வந்தமைக்கு மனதார நாம் நன்றி சொல்ல வேண்டும் .
நன்றிகள் ஐயா , நன்றிகள் ராஜ் .
தம்பி ராஜ் இன்று பதியும் கவிதைகளில் இருந்து கூட இதை செய்ய விழைந்துள்ளார் .இன்றைய கவிதைகளில் இருந்து ஒரு சிறந்த படைப்பை ( புதிய , சமீபத்தில் வந்த படைப்பாளிகளுக்கு முதலிடம் அளிக்கவே விருப்பம் ) தேர்ந்தெடுத்து நாளை விமர்சனம் பதிவார்.
வாருங்கள் புதியவர்களே .. எழுதுங்கள் .
வாருங்கள் தோழர்களே , ஐயாவும் , ராஜும் செய்யும் முயற்சிகளை நாமும் முன்னெடுப்போம் .விருப்பம் இருப்போர் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் , தயை கூர்ந்து .
இது ஒரு தேதி கலந்தாலோசனைக்குத்தான் .
மற்றபடி இது நம் அனைவரின் தேடல் , நம் அனைவரின் கூட்டு பயணம் .
பயணிப்போம் ...