எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விரும்பித்தானே வானமே அணைத்து வைத்திருந்தாய் பின் ஏன்...மேகங்களைப் பிரித்துத்...

விரும்பித்தானே
வானமே
அணைத்து வைத்திருந்தாய்
பின் ஏன்...மேகங்களைப் பிரித்துத்
தள்ளினாய் தூரல்களாய்...??

வேண்டித்தானே
மரமே
உச்சியில் சூடியிருந்தாய்
பின் ஏன்...பூக்களைப் பிரித்துக்
கொட்டினாய் இதழ்களாய்...??

கற்பனையே
அர்த்தத்தோடுதானே
இறுக்கி வைத்திருந்தாய் மொழியை
பின் ஏன்...பிரித்து அளித்தாய்
கவிதைகளாய்...??

பிரமிப்புடன் தானே
பூமியே
படைத்துவைத்திருந்தாய்
மனிதனை..
பின் ஏன்...எடுத்து விட்டாய்
மனிதத்தை...??

பதிவு : agan
நாள் : 15-Feb-15, 6:03 pm

மேலே