குளுமை எனும் பதம் தென்றலை விட்டு விலகுவதில்லை....!!! வாழ்வு...
குளுமை எனும் பதம்
தென்றலை
விட்டு விலகுவதில்லை....!!!
வாழ்வு முழுதும்
விதைக்கு
கீழும் மேலும் தான்...!!!
அடம் பிடித்தாலும்
ஆனந்தப் படுத்தினாலும்
தாயோடுதான் மழலை....!!!
தொட்டுத் தொடரும்
தொடர் உறவாய்
நெருப்பும் வெப்பமும்....!!!
அன்றியும் ,
கவித்துவமும் கவிதையும் அற்ற
கவிதையும் ஏடும் எப்படி
பலரிடம் இணைந்தே
இன்னமும்...!!!