எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்னுமொரு வெண்பா!!!!! அடுக்கடுக்காய் பாக்கள் அழகாய்ப் பதிந்தால் மிடுக்காய்...

இன்னுமொரு வெண்பா!!!!!

அடுக்கடுக்காய் பாக்கள் அழகாய்ப் பதிந்தால்
மிடுக்காய் எழுத்தில் மினுங்கும் - படுகளிப்பில்
பத்துநூறு புள்ளிகளால் பட்டம்வெல் லுந்தமிழ்
பித்தனுக் கென்றும் புகழ்!

குறிப்பு: எனது குறிப்புப் புத்தத்தைப் புரட்டும் பொழுது கண்ணில் பட்டது.... வெண்பா போல் உள்ளதே என்று அசை பிரித்து அலகிட்டு வாய்ப்பாடு பார்த்தால் என்னாலேயே நம்ப முடியவில்லை "வெண்பா".!!!! ஆச்சரியம் தாங்க முடியவில்லை பதிந்து விட்டேன்... (திரு விஜய் நரசிம்மன் அவர்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டு... எனக்குள்ளும் மரபுக் கவிதை இருக்கு என்று கண்டு பிடித்ததற்கு)

நம்புங்கள் அன்றய கிறுக்கலில் எந்த மாற்றமும் செய்யவி்ல்லை!!! தளத்திலிருந்து எதாவது நகல் எடுத்து வைத்திருந்தேனா? என்னையே என்னால் நம்ப முடியவில்லை! என் கண்ணையும்!

பதிவு : முரளி
நாள் : 18-Feb-15, 6:07 pm

மேலே