அப்பா.! இன்னிக்கி பீஸ் கட்ட கடைசி நாள் என...
அப்பா.!
இன்னிக்கி
பீஸ் கட்ட கடைசி நாள்
என பிள்ளை நினைவூட்ட ..
அவன் வகுப்புக்கு வெளியே
நிற்பதும் , நிற்காததும்
இன்று மனைவியின்
கையில்தான் இருக்கிறது .
போன முறை
அவள் காதில் இருந்தது .