நிலவைப் பிடித்த பெண் மெல்ல மேலே இழுக்கிறாள்.... கைக்கெட்டும்...
நிலவைப் பிடித்த பெண்
மெல்ல மேலே
இழுக்கிறாள்....
கைக்கெட்டும் தூரத்தில்
சற்று உடல் வளைத்து
பிடிக்கும் கணத்தில்
ஆடிய வாளி, நிலவை
மீண்டும் கிணற்றுக்குள்
தவற விடுகிகிறது..
தடுமாறி ஏந்திய
உள்ளங்கையில் மெல்ல
நிறமாறி தடுமாறுகிறது
நிலா....
கவிஜி