எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னை கடக்கும் காற்றே ஓர் உதவி செய்வாயா ?...

என்னை கடக்கும் காற்றே ஓர் உதவி செய்வாயா ? !
ஈழத் தமிழன் நான் என் வார்த்தையை நீயாவது
செவி கேட்பாயா ?!

எங்கள் வீட்டு வாசல் ரத்தம் தெளித்து
கண்ணீர் கோலம் போடப் பட்டுள்ளது !

எங்கள் வயல்கள் நிர்வாணமாய்
எங்களை போல !

சிங்கள தோட்டாக்கள்
அவ்வப்போது எங்களை பாவம் பார்ப்பதும் !
அவ்வப்போது எங்கள் உயிர்களிடத்தில்
விளையாடுவதும் !
நாள் தோறும் வேடிக்கை விளையாட்டு !

கண்ணீர் வறண்டு போனது
எங்கள் நிலங்களை போல !

நேற்று என் மனைவி !
இன்று என் மகன் !
நாளை நான் !

காலன் வரவுக்கு முன்னால்
காலாவதி ஆகிறது எங்கள் உயிர் !

ஏ காற்றே என்ன கண்ணீரா ? !
வேண்டாம் வேண்டாம் நீ என்ன
செய்வாய் பாவம் !

எங்கள் அரசியல் தலைவர்கள்
விடும் அறிகைகளை இந்த சிங்களத்து
தொலைக்காட்சி மறக்காமல் ஒளிபரப்புகிறது
விளையாட்டு செய்திகளில் !

எங்கள் பார்வை என்றும் வாசலில் தான்
என்றோ ஒரு நாள் என் தாய் தமிழ்நாட்டில்
எங்களுக்காக ஒரு நல்ல செய்தி வரும்
என்ற நம்பிக்கையில் நாங்கள் !

பதிவு : சுரேஷ்த
நாள் : 23-Feb-15, 9:23 am

மேலே