பகிர்ந்த நாளை எப்படி தூக்கி போட முடியாமல் போகும்...
பகிர்ந்த நாளை எப்படி
தூக்கி போட முடியாமல் போகும்
பகிர்ந்தவை எல்லாம் முடுக்கில் ஒளிந்து கொண்டு
தேட வைக்கின்றன
தேடும் நாளில் நிழல்
இருளுக்குள் பதுங்கிய படி
உறுமுகிற நாயாக இருக்கிறது.
நாளொன்றில் 5CM மழை பெய்தாக வேண்டும்
என்றாசை படுகிறவன் எல்லாம் மனிதனா?
பகிர்ந்த உலகம்
நம்மை தூக்கி போட்டு விடுகிற போது
பகிர்ந்த நாளை எப்படி
தூக்கி போட முடியாமல் போகும்
குரு