எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பட்ஜெட் 2015-2016 சாமான்ய மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. மைய...

பட்ஜெட் 2015-2016 சாமான்ய மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது. மைய அரசின் நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்-2015-206 -இல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. நிதி அமைச்சரின் பட்ஜெட் மீது எனது மற்றும் ஒட்டு மொத்த இந்தியரின் ஆழ்ந்த இரங்கலைத் தெருவித்துக் கொள்கிறேன். மைய மற்றும் மாநில அரசுகளில் பணிபுரியக் கூடிய ஊழியர்களுக்கு வருமான வரியில் திருத்தம் செய்யாதது வேதனையாக இருக்கிறது. ஏனெனில் அரசு ஊழியர்கள் வாங்கக் கூடிய ஒரு மாத சம்பளம் நிதி ஆண்டின் இறுதியில் முழுவதுமாக அரசுக்கே செலுத்த வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்குத் தானா இந்த பி.ஜே.பி. அரசு மைய அரசாக அங்கம் வகிக்கிறது. சென்ற காங்கிரஸ் ஆட்சியை விட மிகவும் மோசமாக இந்த பி.ஜே.பி. அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. இது யாரை பழைய வாங்கும் செயலென்றே புரியவில்லை. இந்தியாவில் பி.ஜே.பி. என்ற ஒரு கட்சி இருந்ததாக தெரியாமல் இருந்தது. இப்போது பி.ஜே.பி. அரசு நீடிக்க வேண்டாம் என்ற வெறி ஒவ்வொரு சாமான்ய மக்களிடமும் தொடர செய்துள்ளது. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்தால் சிறை தண்டனை என்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. ஆனால் அந்த கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் முயற்ச்சியில் இந்த பி.ஜே.பி. அரசு செயல்படாது என்பதைத்தான் இந்த பட்ஜெட் தெருவிக்கிறது. இந்த பி.ஜே.பி. அரசு பொருளாதார சீர் திருத்தம் என்ற பெயரில் இந்தியரின் வாழ்வாதாரத்தை குலைத்து வருவதுதான் செயலாக தெருகிறது. இது ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்யும் என்ற நம்பிக்கை இல்லை. பதவியில் இருக்கின்ற வரையில் கறுப்புப் பண முதலாளிகளிடம் பேரம் பேசும் அரசாகத் தான் இருக்கிறது என்பதை இந்த பட்ஜெட் மறைமுகமாக அறிவிக்கிறது. இனி இந்தியரை அந்த ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். மாத சம்பளத்தில் குடும்பம் நடத்தும் சாமான்யர்களும் இனி கையேந்தும் பிச்சைக்காரர்கள் தான். ஆம் இந்த பட்ஜெட்டால் ஒவ்வொரு அரசு ஊழியனும் லஞ்சம் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவான். இதில் இந்த அரசு ஊழலை எப்படி ஒழிக்கும்? கண்டிப்பாக இந்த அரசாலும் ஊழலை ஒழிக்க முடியாது என்பதைத்தான் இந்த பட்ஜெட் காட்டுகிறது. பி.ஜே.பி. அரசே. மாறி விடு. இல்லையேல் மாற்றத்தைக் காண்பாய்.ஆம். தேர்தலில் தொலைந்துப் போவாய். இதற்க்காத்தான் எந்த தேர்தலிலும் பி.ஜே.பி.யை எந்த இந்தியரும் ஆதரிப்பதில்லை. குறிப்பாக தமிழகத்தில் பி.ஜே.பி. என்றைக்குமே வராது.தமிழக மக்களிடம் பி.ஜே.பி.யின் மீது நம்பிக்கை கிடையாது. அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை நினைத்து வரமான வரியில் திருத்தம் கொண்டுவாருங்கள். அரசு ஊழியர்களை பிச்சைக்கார்களாய் மாற்றி விடாதீர்கள். தற்போதுள்ள வரி விலக்கில் இருந்து ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரமாக உயர்த்திடு.

பதிவு : s.sankusubramanian
நாள் : 1-Mar-15, 4:37 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே