கடமையை ஆற்றும் உரிமையும் ஆணுக்கே! மனிதனாக பிறந்த எல்லோருக்கும்...
கடமையை ஆற்றும் உரிமையும் ஆணுக்கே!
மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஒரு இலட்சியம் இருக்கும் .அதற்கான தேடல் பதின் வயதிலேயே தொடங்குகிறது..........
பாதைகள் அமைத்து செல்லும் வழியில் எந்த தடங்களும் இன்றி செல்ல முடிகிறது ஆண் மகனுக்கு............பெண்ணின் நிலையோ, முதல் குழப்பமாக திருமணத்தில் தொடங்கும்........இலட்சியம் ஒரு கண்ணுமாக,குடும்பம் ஒரு கண்ணுமாக பயணிக்க வேண்டிய கட்டாயம்.......
ஏதோ,ஒரு மண்ணில் விதைக்கப்பட்டு ,வளர்ந்து நிற்கும் ஒரு மரம்........வேரோடு வேறொரு சூழலுக்கு ,மண்ணுக்கு மாற்றப்படும் வைபோகமே திருமண விழாவாக பெண்ணுக்கு அமைகிறது......
பெண்கள் அண்டி போகும் அந்த வீடு ,நிழல் தரும் ஆல மரமாகவும் இருக்கலாம்.....
கருவேலம் காடாகவும் இருக்கலாம்.....இதை,பொறுத்தே வாழ்க்கையின் திசை மாறுகிறது பெண்ணுக்கு......
எந்த ஒரு மனிதனுக்கும் முதல் தேவை இருப்பிடம்.........அது,பெண்ணுக்கு 'தன் சொந்த வீடு' திருமணதிற்கு பின்பு மறுக்க படுகிறது
'வாழ வந்தவள்' பட்டம் ............அதாவது பெரும்தன்மையுடன் ஒரு வாழ்வு பெண்ணுக்கு அளிக்கப் படுகிறது ......நான் எப்பொழுதும் சொல்வது ஒரு பெண்ணுக்கு திருமண பரிசாக பெற்றோர்கள் வீடு கொடுங்கள்.........பயன்படுத்துவதும்,படுத்தாததும் தேவையின் பொருட்டு இருக்கட்டும்........
அந்த காலத்தில் பெண்ணுக்கு கல்வி அளிக்கப் பட்டால் பெண்ணின் அடிமை நிலை மாறும் என நினைத்தனர்........
அது முற்றிலும் தவறு போலும்........பெண்ணின் மீதான சுமைகள் கூட்டப்பட்டு தான் உள்ளது......பணி,பணியினால் கிடைக்கும் வருமானம் கணவன்மார்கள் அனுபவிப்பதே பெரும்பாலும் உள்ளது ....பணி சுமை மட்டுமே பெண்ணுக்கு ..........வீட்டு வேலைகளிலும் ஆண்கள் பங்களிப்பதே இல்லை ................
அதற்கு,மிக முக்கிய காரணம் 'பெண்களே தங்களின் உரிமைகள் மறுக்கப் படுவதை உணர்வதில்லை..........
2.இந்த,கட்டுப்பாட்டினை ,இந்த அமைப்பினை பெண்கள் முழுவதும் விரும்புகின்றனர் .ஏற்றுகொள்கின்றனர்........
3.ஆண்களுக்கு செய்யும் சேவகம் தனது பாக்கியம் என்று நினைக்கின்றனர்.
4.ஏனெலில்,அன்பும் அடக்கமும் ,சேவைத் தன்மையும் பெண்களுக்கு சிறு வயதிலேயே கற்பிக்கக் படுகிறது...........
எண்ணிக்கையில் சரி பாதி உள்ள பெண்களின் திறமை சமையல் அறைக்குள் அடைப்பட்டு கிடக்கிறது............
குறிப்பு:
எல்லா பெண்கள் போன்றும் எனக்கும் இந்த குணம் உண்டு ...என் பெயரில் உள்ள தமிழரசன் தான் எனக்கு சமூக அந்தஸ்து என்று நினைப்பவள் .............அதற்கான முழு தகுதியும் என்னவருக்கு உண்டு...........