சாம்பாருன்னு சொல்லி.. வெந்நீர்ல சாம்பார் பொடின்னு செங்கல் பொடியை...
சாம்பாருன்னு சொல்லி.. வெந்நீர்ல சாம்பார் பொடின்னு செங்கல் பொடியை தூவி ஒரு காய்ந்துப்போன முருங்கைகாய்..அழுகிப்போன தக்காளி, சொத்தையான கத்தரிக்காய் வேக வச்சி ஊத்துறான்.... இது கூட ஒரு நாத்தம்பிடிச்ச மீனை போட்டு மீன் குழம்புன்னு சொல்றான்...!
சென்னை.. பேச்சிலர்ஸ் ஏரியாவுல இப்படித்தான் பல மெஸ் இருக்கு........!
ஒரு வீதியில . . 5 ஹோட்டலுக்கு ஒரு மருத்துமனை ஏன் இருக்குதுன்னு அப்போதான் நான் புரிஞ்சிக்கிட்டேன் .
. கூட்டணி வியாபாரம் போலிருக்கு...!
போனவாரம் .. சுகாதாரத்துறைக்கு புகார் அனுப்பிட்டேன்.
இப்போ..
........நடவடிக்கை எடுத்துடாங்க.
ஆமாங்க .. நான் தங்கியிருக்கும் விடுதியில இருந்து என்னை காலி பண்ண சொல்லிடாங்க.
வாழ்க ஜனநாயகம்..!
-இரா.சந்தோஷ் குமார்